×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஆரம்பமே அடி தூள்... மாஸ் காட்டிய விஜய் மக்கள் இயக்கம்.! கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்.!

ஆரம்பமே அடி தூள்... மாஸ் காட்டிய விஜய் மக்கள் இயக்கம்.! கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்.!

Advertisement

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக கடந்த 19-ந்தேதி நடைபெற்றது.  இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் பல பகுதிகளில் திமுக முன்னிலையில் உள்ளது. 

இதுதவிர தேமுதிக, அமமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளும் ஆங்காங்கே சில பகுதிகளில் வெற்றி பெற்று வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் விஜய்யின் விஜய் மக்கள் இயக்கமும் உள்ளாட்சி தேர்தலில் களம் கண்டது. இயக்கத்தை சார்ந்தவர்கள் சுயேட்சை சின்னத்தில் போட்டியிட்டனர்.

இந்த தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. அதன்படி புதுக்கோட்டை நகராட்சியில் 4வது வார்டில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த வேட்பாளர் பர்வேஷ் 547 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அதே போல இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை நகராட்சி 3ஆவது வார்டிலும் விஜய் மக்கள் இயக்கம் வெற்றி பெற்றுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#election #Vijay makkal iyakam
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story