×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

விஜய்யின் அடுத்த படத்தின் இயக்குனர் யார்..? பழைய இயக்குனரிடம் கதை கேட்ட விஜய்.. மிகுந்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

நடிகர் விஜய்யின் அடுத்த படத்தை இயக்க போகும் இயக்குனர் யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Advertisement

நடிகர் விஜய்யின் அடுத்த படத்தை இயக்க போகும் இயக்குனர் யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய். கொரோனா காரணமாக படம் வெளியாவது தாமதமாகிவருகிறது. இந்நிலையில் விஜய் நடிக்க இருக்கும் அடுத்த படத்தை இயக்க போகும் அந்த இயக்குனர் யார் என்ற கேள்வி தற்போது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ஏற்கனவே இயக்குனர் முருகதாஸ் விஜய்யின் அடுத்த படத்தை இயக்க போவதாகவும், இந்த படம் துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கலாம் எனவும் கூறப்பட்டது. இந்நிலையில் முருகதாஸ் ஒருசில பிரச்சனை காரணமாக அந்த படத்தில் இருந்து விலகினார்.

இதனை அடுத்து மகிழ்திருமேனி, பேரரசு ,மோகன்ராஜா, ஹரி இவர்களில் யாரவது ஒருவர் விஜய்யின் அடுத்த படத்தை இயக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் பிரபல இயக்குனர் மற்றும் நடிகருமான எஸ்.ஜே சூர்யா விஜய்யின் அடுத்த படத்தை இயக்கலாம் என தற்போது தகவல்கள் வெளியாகிவருகிறது.

எஸ்.ஜே சூர்யாவிடம் விஜய் கதை கேட்டுள்ளதாகவும், அந்த கதை அவருக்கு பிடித்துள்ளதாகவும் கூறப்படும்நிலையில் தளபதி 65 படத்தின் இயக்குனர் யார்தான் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர். ஏற்கனவே விஜய் - எஸ்.ஜே சூர்யா கூட்டணியில் உருவான குஷி திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#vijay #Thalapathi 65 #sj surya
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story