பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புளுகல் பெருமானே - கடுமையாக தாக்கிப்பேசிய விஜய்.!
சேலம் பொதுக்கூட்டத்தில் பேசிய விஜய் பெண்கள் பாதுகாப்பு தொடர்பான கேள்விகளை எழுப்பினார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் உரையாற்றிய விஜய், திமுக ஆட்சியின் செயல்பாடுகள், சட்டம் - ஒழுங்கு தொடர்பான விவகாரங்கள் குறித்து தனது விமர்சனங்களை முன்வைத்தார்.
சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில் நடைபெற்ற தவெக தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசிய விஜய், "கடந்த 4 ஆண்டுகளாக தமிழகத்தை ஆட்சிசெய்த திமுக, 4 ஆண்டுகள் கடந்தபின் ஒவ்வொரு வீட்டின் கதவையும் தட்டி கனவை சொல்லுங்கள் என கேட்கிறார்கள். மக்களின் கனவு உங்களுக்கு தெரியுமா? அவர்களின் கனவை நான் சொல்லட்டுமா? 2021, 2024 தேர்தலில் மக்கள் உங்களுக்கு வாக்களித்ததற்கு காரணம், நல்லது செய்ய தான். ஆனால், நீங்கள் கொடுத்தது மக்கள் விரோத ஆட்சி. உங்களின் விரோத ஆட்சியை அகற்றி எங்களை ஆட்சிக்கு கொண்டு வருவது தான் அவர்களின் தற்போதைய கனவு. இந்த தேர்தலில் வெற்றி அடைந்து 100% தூய சக்தி TVK ஆட்சி அமைக்கும். அதில் மக்களின் கனவுகள் நிஜமாகும்.
ஆளுங்கட்சி எதற்கு?
தமிழ்நாடு டெல்லிக்கு Out of Contral என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறிவிட்டு, ஆட்சியை Out of Controlல் வைத்துள்ளார். மக்கள் சந்தோசமாக இருக்கிறர்கள் என்றால், ஏன் விவசாயிகள் போராட்டம் நடக்கிறது? தொழிலாளர்கள், தூய்மை பணியாளர்கள், ஆசிரியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், செவிலியர்கள், மாற்றுத்திறனாளிகள் என அனைவரும் ஏன் போராடுகிறார்கள். மக்கள் சந்தோசமாக இருந்தால் பொங்கல் வைத்து கொண்டாடுவார்கள். உங்களின் ஆட்சியில் போராட்டம் செய்கிறார்கள். பஸ்வசதி, ரோடு சரியில்லை, வேலைவாய்ப்பு என பல பிரச்சனை மக்களுக்கு இருக்கிறது. அடிப்படை விஷயங்களே பிரச்சனையாக இருந்தால் ஆளுங்கட்சி எதற்கு?.
இதையும் படிங்க: வசைபாடி ஒதுக்கிய திமுக.. வாய்ப்பு கொடுத்த விஜய்.. மனம் திறந்த நாஞ்சில் சம்பத்.!
பெண்கள் பாதுகாப்பு:
ஆட்சிக்கு வருவதற்கு முன்பும் பொய்கள், இன்றும் பொய்கள். மாத்தி-மாத்தி பேசுவதில் நீங்கள் (மு.க. ஸ்டாலின்) வேற லெவல். 2 ஆண்டுகளில் 70% வாக்குறுதி நிறைவேற்றியதாக கூறினார்கள், 4 ஆண்டுகளில் 90% என கூறிவிட்டு, தற்போது 80% வாக்குறுதி நிறைவேற்றியதாக கூறுகிறார்கள். இன்னும் தேர்தல் வரும்போது 80% ல் இருந்து 70% ஆகலாம், குறையவும் செய்யலாம். பொய்யிலேயே பிறந்து பொய்யிலேயே பிறந்த புலவர் பெருமானே என்பது சொல்வழக்கு என்றால், அதனை ஸ்டாலின் புழுகல் பெருமானே என மாற்ற வேண்டும். பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது என்றால் கோவை கல்லூரி பெண் வன்கொடுமை, அண்ணா பல்கலை.., மாணவி வழக்கு, இன்னும் பல போக்ஸோ வழக்கு, போதைப்பொருள் கலாச்சாரம் ஏன் தமிழகத்தில் நடக்கிறது?
டிஜிபி நியமனம் தொடர்பான கேள்வி:
சட்டம் ஒழுங்கு சரியாக இருந்தால் ஏன் ரயில் நிலையத்தில் இளைஞர் தாக்கப்பட்டார். முதலில் தமிழ்நாட்டுக்கு டிஜிபி நியமனம் செய்ய வேண்டும். மக்களின் அடிப்படை தேவையை தீர்ப்பது நமது வேலை. தேர்தல் அறிக்கை தயாராகி வருகிறது. அது தெளிவானதாக வரும். என்னை நம்பும் மக்களை நான் ஏமாற்றமாட்டேன். ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக நடைமுறைக்கு சாத்தியமில்லாத வாக்குறுதி கொடுக்கமாட்டேன்" என பேசினார்.
இதையும் படிங்க: #Breaking: குப்பைக்கு போகப்போகும் திமுக ஆட்சி.. திராணி இருக்கா உங்களுக்கு? தவெக விஜய் சரமாரி கேள்வி.!