தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வேலூரில் ஓடும் இரயிலில் பெண் பலாத்கார முயற்சி; தேசிய மகளிர் ஆணையம் நோட்டிஸ்..!

வேலூரில் ஓடும் இரயிலில் பெண் பலாத்கார முயற்சி; தேசிய மகளிர் ஆணையம் நோட்டிஸ்..!

Vellore Pregnant Girl rape Attempt in Running Train NCW Notice to Tamilnadu DGP  Advertisement

 

திருப்பூரில் செயல்பட்டு வரும் தனியார் பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 4 மாத கர்ப்பிணி பெண், சொந்த ஊர் செல்ல கோவை - திருப்பதி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸில் பயணம் செய்தார். இவர் வேலூர் மாவட்டத்தில் பயணித்தபோது, ஹேமராஜ் என்ற நபரால் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி நடந்தது. 

கர்ப்பிணி என்று பெண் கூறியும் கொடூரன் கேட்காத நிலையில், அவனிடம் இருந்து பெண்மணி போராடியபோது, இரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்டார். இதனால் தலை, கை, கால் என உடலில் படுகாயம் அடைந்த பெண்மணி, வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், ஹேமராஜ் என்ற நபரை கைது செய்தனர். 

இதையும் படிங்க: ஓடும் இரயில் பலாத்கார முயற்சி.. உயிருக்கு போராடும் கர்ப்பிணி பெண் நடுங்கவைக்கும் வாக்குமூலம்.!

தூக்கிலிட கோரிக்கை

அவரிடம் நடந்த விசாரணையில் பெண்கள் விஷயத்தில் சைக்கோ கொடூரனான ஹேமராஜ், கடந்த 2022 மற்றும் 2024ம் ஆண்டுகளில் பெண்களை பலாத்காரம் செய்து கொலை செய்து குண்டாசில் கைதான காமக்கொடூரன் என்பதும் அம்பலமானது. அவனை தூக்கிலிட வேண்டும் என கோரிக்கையும் எழுந்துள்ளது.

vellore

பெண் பகீர் வாக்குமூலம்

வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கர்ப்பிணி பெண்மணி அளித்த வாக்குமூலத்தில், "ஜோலார்பேட்டைக்கு வந்தபோது பெண்கள் இறங்கிவிட்டனர். அதில் அவர் ஏறினார். அரைமணிநேரம் கழித்து, எனது ஆடையை களைந்து பலாத்காரம் செய்ய முற்பட்டார். அப்போது இருவரும் சண்டையிட்டோம். எனது முடியை பிடித்து இழுத்து வந்து, வாசல் வழியே தள்ளிவிட்டார். பின் என்ன நடந்தது என தெரியவில்லை. அவசர ஊர்தி வந்தபோது தான் எதோ நிதானம் வந்தது" என கூறினார்.

மகளிர் ஆணையம் நோட்டிஸ்

இந்நிலையில், தமிழ்நாடு டிஜிபி 3 நாட்களில் இந்த விஷயம் குறித்து அறிக்கை அளிக்க வேண்டும் என சம்மன் வழங்கியுள்ள தேசிய மகளிர் ஆணையம், இரயிலில் கர்ப்பிணி தாக்கப்பட்டுள்ள சம்பவம் தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பு தொடர்பான கவலையை வழங்குகிறது என குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க: குழந்தைக்கு சாகோஸ் வாங்கி கொடுக்குறீங்களா? உயிருடன் நெளிந்த புழு - வேலூரில் தாய்க்கு பேரதிர்ச்சி.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#vellore #Pregnant Girl #Rape Attempt #வேலூர் #கர்ப்பிணி பெண் #பலாத்கார முயற்சி
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story