×
 
☰
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

திருமணமாகாத விரக்தியில் மது போதைக்கு அடிமையான நபர்.. பரிதாபமாக பலியான சம்பவம்..!

திருமணமாகாத விரக்தியில் மது போதைக்கு அடிமையான நபர்.. பரிதாபமாக பலியான சம்பவம்..!

Advertisement

ஈரோடு மாவட்டம் திருநகர்காலனி பகுதியில் உள்ள சுப்பையா வீதியில் வசித்து வருபவர் மணி. இவர் தனியார் வாகன டிரைவராக பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில் 50 வயதாகியும் மணிக்கு திருமணமாகாத நிலையில் இவர் மிகுந்த மன விரக்தியில் இருந்துள்ளார். இதனால் மணி  மது போதைக்கு அடிமையாகி உள்ளார். இதனை தொடர்ந்து மணி தினமும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

இந்நிலையில் சம்பவத்தன்று இரவு நீண்ட நேரமாகியும் மணி வீட்டிற்கு வரவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் பதற்றமடைந்த மணியின் குடும்பத்தினர் அவரை தேடி அந்த பகுதியில் சுற்றி அழைந்துள்ளனர்.
இந்நிலையில் மூலப்பட்டறை அருகே உள்ள டாஸ்மாக் கடை முன்பாக குடிபோதையில் மணி மயங்கி கிடப்பதாக மணியின் குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து மது போதையில் மயங்கி இருந்த மணியை குடும்பத்தினர் எழுப்ப முயற்சித்துள்ளனர். ஆனால் அவர் மயங்கிய நிலையிலே இருந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மணியின் குடும்பத்தினர் அவரை சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். 

பின்னர் அங்கு மணியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக ஈரோடு வடக்கு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் மணி இறபிற்கான காரணத்தை கண்டறிய மணியின் உடலை காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Unmarried person #Addicted drugs #died #Investigation
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story