அதிர்ச்சி! கிணற்றில் மிதந்த அடையாளம் தெரியாத ஆணின் உடல்! உடல் பாகங்கள் சில காணவில்லை! சிவகங்கையில் பரபரப்பு...
அதிர்ச்சி! கிணற்றில் மிதந்த அடையாளம் தெரியாத ஆணின் உடல்! உடல் பாகங்கள் சில காணவில்லை! சிவகங்கையில் பரபரப்பு...
சிவகங்கை மாவட்டத்தின் கட்டம்மன்கோட்டை, ஜாரி புதுக்கோட்டை, கொந்தகை உள்ளிட்ட பகுதிகளில் மதுரை ஆதீனம் மடத்திற்கு சொந்தமான நிலங்கள் பரந்துவிரிந்துள்ளன. இவ்வூர் மக்கள் இந்த நிலங்களை மேய்ச்சல் நிலமாக பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், முக்குடி பகுதியில் உள்ள மடத்தின் நிலத்தில் ஒரு பகுதியில் மரங்கள் நட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. அதே நிலத்தில், விவசாய தேவைக்காக ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தோண்டப்பட்ட கிணற்றில் தற்போது தண்ணீர் நிரம்பி உள்ளது.
நேற்று மாலை அப்பகுதியில் சென்ற கிராம மக்கள், அந்த கிணற்றில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் உடல் மிதப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே தகவல் தெரிவிக்கப்பட்ட போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை மீட்டனர். பல மாதங்களுக்கு முன்பே அவர் இறந்திருக்கலாம் எனவும், உடல் பாகங்கள் சில காணப்படவில்லை எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: வீட்டில் நிர்வாண கோலத்தில் இறந்து கிடந்த பெண்! மர்மமான முறையில் மரணமடைந்த பகீர் சம்பவம்..
சடலமாக மீட்கப்பட்ட நபர் யார்? அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர்? எப்படிக் கிணற்றில் விழுந்தார்? என்பதனைத் தீர்மானிக்க போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: என் புருஷன் சாகல! இன்னும் கொஞ்சம் கொடுக்கவா? கள்ளகாதலனுடன் உல்லாசமாக இருக்க மனைவி செய்த அதிர்ச்சி செயல்! வைரலாகும் ஆடியோ!