×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தம்பி.. எவ்வளவு செலவு செய்வீங்க.. இங்க எதுக்கு வந்தீங்க..நேர்காணலில் நடந்த சுவாரஸ்யம்..! உதயநிதி ஸ்டாலின் சொன்ன பதில்..

தேர்தலில் போட்டியிட நேர்காணலுக்கு சென்றபோது தன்னிடம் என்ன கேள்வி கேட்கப்பட்டது என்பது குறி

Advertisement

தேர்தலில் போட்டியிட நேர்காணலுக்கு சென்றபோது தன்னிடம் என்ன கேள்வி கேட்கப்பட்டது என்பது குறித்து உதயநிதி ஸ்டாலின் கலகலப்பாக பேசியுள்ளார்.

வர இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளர்கள் தேர்வு, கட்சிகளுடனான கூட்டணி போன்றவற்றில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக வேலை பார்த்துவருகிறது. இந்நிலையில் சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக நடிகரும், திமுக கட்சியின் தலைவர் ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் விருப்பமனு வழங்கியுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் விழா ஒன்றில் கலந்துகொண்ட அவர், விருப்பமனு வழங்கியபோது தன்னிடம் என்ன கேள்வி கேட்கப்பட்டது என்பது குறித்து, அங்கு நடந்த கலகலப்பான சம்பவங்களை பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, "நான் உள்ளே போனதும், டி.ஆர்.பாலு அவர்கள் நீ எதுக்குப்பா நேர்காணலுக்கு வந்த, நேராக சேப்பாக்கம் தொகுதியில் போய் வேலையைப்பார் என சொன்னார். அருகில் இருந்த அண்ணன் ஆ.ராசா, தம்பி தொகுதிக்காக எவ்வளவு செலவு செய்வீங்க என கேட்டார்.

நான் அப்பா கொடுக்கும் பணம் அனைத்தையும் செலவு செய்வேன்னு சொன்னேன். உடனே அருகில் இருந்த துரைமுருகன் அவர்கள் நான்தான் பொதுச்செயலாளர், நான்தான் முடிவெடுப்பேன் என கூறியதாக தெரிவித்துள்ளார்".

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#stalin #dmk #Udhaya nithi stalin
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story