×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

UAEல் வேலை பார்க்கும் தமிழர்களே உஷார்.. VPN பயன்படுத்துறீங்களா? அபராதம் & சிறைத்தண்டனை.. எச்சரிக்கை..!

UAE VPN Rules Explained: அமீரக வாழ் வெளிநாட்டினர் VPN பயன்படுத்தி முறைகேடான செயலில் ஈடுபட்டால் கடும் தண்டனை கிடைக்கும்.

Advertisement

VPN பயன்படுத்தினால் தேவையில்லாத சிக்கலில் மாட்டிக்கொள்ளும் வாய்ப்புகள் அதிகம் என்பதால், அமீரக வாழ் தமிழர்கள் கவனமாக இருப்பது நல்லது.

அமீரக அன்பர்களே!

UAE Cracks Down on Illegal VPN Use: துயாய், அபுதாபி, ஷார்ஜா உட்பட ஐக்கிய அரபு அமீரகத்தில் பல நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினர் சுற்றுலா மற்றும் வேலை, கல்விக்காக வந்து தங்கியிருக்கின்றனர். இவர்களுக்கு என பிரத்தியேக விசா கொடுக்கப்படும் நிலையில், ஒவ்வொரு விசாவுக்கு குறிப்பிட்ட காலக்கெடு இருக்கின்றன. பொதுவாக அமீரகம் செல்லும் பலரும் வாட்சப் போன்ற சில செயலிகளில் நேரடியாக வீடியோ / ஆடியோ கால் பேச VPN எனப்படும் நெட்ஒர்க்கை பயன்படுத்துகின்றனர். 

இதையும் படிங்க: லேப்டாப் தீப்பிடித்து வெடிக்கும் அபாயம்.. இந்த தவறை செய்யாதீங்க.. எச்சரிக்கும் நிபுணர்கள்.!

கடும் தண்டனை:

அமீரகத்தில் சாதாரணமாக வாட்சப், பேஸ்புக்கில் வீடியோ கால் பேச முடியாது. இதனால் வெளிநாட்டில் இருந்து வரும் பலர் உட்பட தமிழர்களும் VPN எனப்படும் செயலியை பயன்படுத்தி, தங்களின் இருப்பிடத்தை தற்காலிகமாக மாற்றி வாட்சப், பேஸ்புக்கில் வீடியோ கால் பேசி வருகின்றனர். இதனிடையே, சமீபத்தில் VPN பயன்படுத்தி முறைகேடான செயலில் ஈடுபட்டால் கடுமையான தண்டனை விதிக்கப்படும் என அமீரக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

அரசு எச்சரிக்கை:

சமீபகாலமாக மத்திய கிழக்கு நாடுகளில் போர்ப்பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், அமீரகத்தில் இணையவழி தாக்குதல் அதிகரித்து வருகின்றன. இதனால் நாட்டில் உள்ள அனைவரின் பாதுகாப்பை உறுதி செய்ய இனிவரும் நாட்களில் VPN பயன்படுத்தி சட்டவிரோத செயலில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இதனால் சாதாரணமாக வாட்ஸப்பில் கால் பேசும் நபர்களும் செய்வதறியாது தவித்து இருக்கின்றனர். 

கம்பெனிக்கு தடையில்லை:

இதுகுறித்து அமீரக தரப்பு தகவலில், VPN பயன்படுத்துவது குற்றம் இல்லை என்றாலும், VPN முறையை ஆக்டிவேட் செய்து முறைகேடான விஷயங்களில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும், அனுமதி வாங்கி பெருநிறுவனங்களின் பணியாளர்களின் தொடர்புக்காக பயன்படுத்தப்படும் VPN முறைகளில் எவ்வித மாற்றமும் இல்லை என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் VPN பயன்படுத்தி முறைகேடான விஷயங்களில் ஈடுபட்டால் ஆறு மாத சிறை தண்டனை முதல் 50 ஆயிரம் (இந்திய மதிப்பில் ரூ.1.3 கோடி) முதல் 2 கோடி திராம் வரை அபராதம் செலுத்த நேரிடும்.

இதை பண்ணாதீங்க:

அதாவது, VPN பயன்படுத்தி அமீரக அரசால் தடை செய்யப்பட்டுள்ள சூதாட்டம் செய்வது, ஆன்லைன் கேம்ப்ளிங் ஆப்-பில் முதலீடுசெய்வது, ஆபாச படங்கள் பார்ப்பது அல்லது அதனை தேடுவது, அனுமதியில்லாமல் VPN பயன்படுத்தி வாட்சப், பேஸ்டைம் ஆப்களில் ஆடியோ /  கால் பேசுவது, சைபர் குற்றங்களில் ஈடுபடுவது போன்றவை குற்றமாக கூறப்பட்டுள்ளது. இதனை செய்தால் கட்டாயம் ஒருநாள் மாட்டிக்கொள்ளும்போது அபராதம் செலுத்த வேண்டியிருக்கும் அல்லது சிறை தண்டனையை எதிர்கொள்ள நேரிடும்.

இதையும் படிங்க: குவைத், துபாய், கத்தார், அபுதாபியில் அடுத்தடுத்து சத்தம்.. பதறும் மக்கள்.. நடப்பது என்ன?

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#World news #Dubai #Dubai VPN Use #UAE VPN Alert #விபிஎன் துபாய் #அமீரகம்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story