×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பஞ்சர் ஆன லாரியை ஓரமாக நிறுத்தி டயர் மாற்றிய ஓட்டுநர்.! அடுத்தடுத்து வந்து மோதிய ஆம்னி பேருந்து மற்றும் கார்.! பரிதாபமாக போன உயிர்கள்.!

பஞ்சர் ஆன லாரியை ஓரமாக நிறுத்தி டயர் மாற்றிய ஓட்டுநர்.! அடுத்தடுத்து வந்து மோதிய ஆம்னி பேருந்து மற்றும் கார்.! பரிதாபமாக போன உயிர்கள்.!

Advertisement

தூத்துக்குடியில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த சரக்கு லாரி ஒன்று நள்ளிரவில்  மதுரை தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் சென்று  கொண்டிருந்தபோது திடீரென பஞ்சர் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து லாரியின் ஓட்டுநர் லாரியை ஓரமாக நிறுத்தி மாற்று டயர் மாற்றிக் கொண்டிருந்தார்.

அப்போது அதே சாலையில் 36 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி அதிவேகமாக சென்று கொண்டிருந்த ஆம்னி பஸ் நின்றுகொண்டிருந்த லாரியில் வேகமாக மோதி விபத்து ஏற்பட்டது. சற்றுநேரத்தில் பின்னால் வந்த கார் ஒன்று ஆம்னி பஸ் பின்னால் அடுத்தடுத்து மோதி கோர ஏற்பட்டது.

இந்த விபத்தில் டயர் மாட்டிக்கொண்டிருந்த லாரி ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பரிதாபகமாக உயிரிழந்தார். மேலும் ஆம்னி பஸ் மற்றும் காரில் பயணம் செய்த 14 பேர் பலத்த காயமடைந்தனர். விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் ஆம்னி பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#accident #madurai
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story