சாலையில் நடந்த்து சென்ற பெண்ணை வலுக்கட்டாயமாக இழுத்துச்சென்று கோவிலுக்குள் வைத்து பாலியல் வன்கொடுமை செய்த கயவர்கள்.!
நாகையில் கோவிலுக்குள் வைத்து கணவரை இழந்த பெண் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் அதனை தடுக்க பல்வேறு சட்டங்களை இயற்றி குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகளையும் வழங்கி வருகிறது. இந்தநிலையில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் கோவிலுக்குள் வைத்து கணவரை இழந்த பெண் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம் வெளிப்பாளையம் நாகதோப்பு பகுதியை சேர்ந்த கணவரை இழந்த பெண் ஒருவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். நேற்று முந்தினம் இரவு 9 மணி அளவில் நாகை காமராஜர் நகர் பகுதியில் உள்ள தன் சகோதரி வீட்டுக்கு அந்த பெண் சென்றுள்ளார். அப்போது, அந்த வழியே வந்த வந்த இரண்டு இளைஞர்கள் அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக அருகிலிருந்த அம்மன் கோவிலுக்கு இழுத்துச் சென்று, கோவில் வளாகத்துக்குள் வைத்து இரண்டு பேரும் கூட்டாக வன்கொடுமை செய்துள்ளனர்.
அதிகாலை 2 மணியளவில் இரண்டு இளைஞர்களும் அந்த பெண்ணை விட்டு விட்டு தப்பி சென்றுள்ளனர். பின்னர் , அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பாதிக்கப்ப்டட பெண் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த கொடூர செயலில் ஈடுபட்ட அருண் ராஜ், ஆனந்த் ஆகிய இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.