பாஜகவில் மிஸ்ட்டு கால் கொடுத்து இணைந்த காவலர்கள்; அதிரடியாக பணியிடைநீக்கம்.!
பாஜகவில் மிஸ்ட்டு கால் கொடுத்து இணைந்த காவலர்கள்; அதிரடியாக பணியிடைநீக்கம்.!
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, கடந்த டிசமபர் 27ம் தேதி 'என் மண் என் மக்கள்' பயணம் மேற்கொண்டு இருந்தார். அச்சமயம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இவர்கள் பணியில் இருக்கும்போதே, மிஸ்ட்டு கால் கொடுத்து பாஜகவில் தன்னை இணைத்துகொண்டனர். இதனிடையே, இவ்விவகாரம் உயர் அதிகாரிகளுக்கு தெரியவந்து, துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், இருவரும் பணியில் இருந்தபோதே சர்ச்சை செயலில் ஈடுபட்டது அம்பலமானது.
இதனையடுத்து, நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் தலைமையில் விசாரணை நடந்து, மறுநாளே காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டனர். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையையடுத்து, தஞ்சாவூர் சரக டிஜிஐ ஜெயச்சந்திரன் உத்தரவின் பேரில் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.