சபாஷ் சரியான போட்டி!! ஒரே தொகுதியில் அண்ணன் திமுக வேட்பாளர், தம்பி அதிமுக வேட்பாளர்!!
two brothers in same same place in different party
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் அறிவிப்பு வெளியாகும் முன்னரே அரசியல் காட்சிகள் தங்களது கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையில் தீவிரம் காட்ட துவங்கினர்.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. வரும் ஏப்ரல் 18ஆம் தேதி, தமிழகத்தின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியின் ஒரு தொகுதிக்கும் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. அதேநாளில் காலியாக 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக, அதிமுக சார்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன், தம்பி வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அண்ணன் திமுக வேட்பாளராக களமிறங்க, தம்பி அதிமுக வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். அ.தி.மு.க., வில் லோகிராஜன் ஆண்டிபட்டி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அதே தொகுதியில் இவரை எதிர்த்து தி.மு.க. சார்பில் அவரது உடன் பிறந்த அண்ணன் மகாராஜன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.