தவெக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் ஊழல் செய்தால் என்ன தண்டனை? முக்கிய முடிவெடுத்த விஜய்? அமைச்சர் ஆனந்த் உச்சகட்ட எச்சரிக்கை.!
Minister Bussy Anand Speech: ஊழல் செய்தால் பதவியில் இருந்து நீக்கப்படுவீர்கள் என அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் பேசினார்.
நாங்கள் அதிகம் செலவு செய்து வரவில்லை என்பதால் ஊழல் செய்ய வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என தவெக அமைச்சர் பேசினார்.
மாற்றுக்கட்சியினர் இணையும் விழா:
சென்னை பனையூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் அலுவலகத்தில், மாற்றுக்கட்சியில் இருந்து தவெகவில் இணையும் பிரதிநிதிகளை வரவேற்று சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உட்பட பலரும் கலந்துகொண்டனர். இந்த விழாவில் தொடர்ந்து பலரும் தங்களின் கருத்துக்களை முன்வைத்து இருந்தனர்.
இதையும் படிங்க: TVK Vijay: விஜய்க்கு அனுமதி கொடுத்த புதுச்சேரி அரசு.. அதிகாரப்பூர்வ உத்தரவு.!
மரியாதை உறுதி:
அந்த வகையில் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் பேசுகையில், "மாற்றுக்கட்சியில் இருந்து பலரும் இணைவது, முதல்வர் மீதான நம்பிக்கை தான். அதன்பேரில் நீங்கள் வந்துள்ளீர்கள். உங்களுக்கு எக்காரணத்தை கொண்டும் உரிய மரியாதை கொடுக்கப்படும்.
விஜய் எங்களின் அடையாளம்:
எங்களது வேட்பாளர்களை எதிர்த்து பலகோடி ரூபாய் செலவு செய்தார்கள். எங்களின் வேட்பாளர்கள் ரூ.75,000 மட்டுமே செலவு செய்து சட்டப்பேரவையில் உறுப்பினராக இருக்கிறார்கள். நாங்கள் 234 தொகுதியிலும் விஜயின் முகத்தை மட்டுமே காண்பித்து ஜெயித்தோம்.
ஊழல் இருக்காது:
இதனால் எங்களுக்கு லஞ்சம் வாங்க வேண்டியது இல்லை. ஊழல் செய்ய வேண்டியதும் இல்லை. ஊழல் செய்தால் அடுத்த வினாடி பதவியில் இருக்கமாட்டோம். ஊழல் செய்தால் முதல்வர் உடனடி நடவடிக்கை எடுத்துவிடுவார். நாங்கள் ஊழல் செய்ய வரவில்லை. மக்களின் சேவையே எங்களின் நோக்கம்" என பேசினார்.
இதையும் படிங்க: #BREAKING: அதிமுகவில் பிளவா? இதுதான் உண்மை - எஸ்.பி. வேலுமணி பரபரப்பு பேட்டி..!