×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தவெக நிர்வாகி சரமாரியாக வெட்டி படுகொலை! திருமண வீட்டுக்கு வந்த இடத்தில் நேர்ந்த கொடூரம்.... சிவகங்கையில் பரபரப்பு..!!!

சிவகங்கை ரயில் நிலையம் அருகே டாஸ்மாக் கடை பின்புறத்தில் ஏற்பட்ட தகராறில் தவெக நிர்வாகி கார்த்திகேயன் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

சிவகங்கை ரயில் நிலையம் அருகே அரசு மதுபானக் கடை பின்புறத்தில் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்துள்ளது. தவெக நிர்வாகியான கார்த்திகேயன் என்பவர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில், போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். குற்றவாளிகளை பிடிக்க பல்வேறு கோணங்களில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

திருமண விழாவுக்கு வந்த நிர்வாகி

சென்னை மதுரவாயலைச் சேர்ந்த கார்த்திகேயன் (40), தவெக நிர்வாகியாக செயல்பட்டு வந்தார். தகவலின்படி, சில நாட்களுக்கு முன்பு சிவகங்கையில் நடைபெற்ற உறவினர் திருமண விழாவில் பங்கேற்பதற்காக அவர் வந்திருந்தார்.

இதையும் படிங்க: பக்கத்து வீட்டுக்காரருடன் குஜாலாக இருந்த மனைவி! கணவனும் மகனும் சேர்ந்து செய்த அதிர்ச்சி செயல்.... ஒரே இரவில் ஒட்டுமொத்தமாக மாறிய வாழ்க்கை...!!!

நேற்று இரவு சிவகங்கை ரயில் நிலையம் அருகே உள்ள அரசு டாஸ்மாக் கடைக்கு சென்ற அவர், கடையின் பின்புற பகுதியில் சிலருடன் அமர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது அவர்களுக்குள் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

தகராறைத் தொடர்ந்து சரமாரி தாக்குதல்

வாக்குவாதம் முற்றிய நிலையில், அங்கிருந்த சிலர் தாங்கள் வைத்திருந்த ஆயுதங்களை எடுத்து கார்த்திகேயனை தாக்கியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தாக்குதலில் பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.

இதனால் அப்பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

சிசிடிவி காட்சிகள் ஆய்வு

தகவலறிந்த சிவகங்கை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

கொலையில் தொடர்புடையவர்கள் தப்பியோடியுள்ள நிலையில், அவர்களை கண்டுபிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் அருகிலுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறே கொலைக்குக் காரணமா அல்லது பின்னணியில் வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தக் கொலை சிவகங்கை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இதையும் படிங்க: நள்ளிரவில் 6 இளைஞர்களைப் அறிவாளால் தாக்கிய மர்ம கும்பல்! தென்காசியில் நடந்த பயங்கரம்...!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#TVK #சிவகங்கை #Karthikeyan #murder case #tasmac
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story