காதல் மனைவியை சித்ரவதை செய்த தவெக பிரமுகர்.. ஆண் வாரிசு, பணத்துக்காக அதிர்ச்சி செயல்.. கண்ணீர் புகார்.!
Namakkal News: காதல் மனைவிக்கு தொல்லை கொடுத்ததாக கணவரின் மீது புகார் எழுந்துள்ளது.
12 வயதுடைய குழந்தையை வைத்துக்கொண்டு தவெக பிரமுகர் ஆண் வாரிசுக்காக மனைவியை துன்புறுத்தியதாக புகார் எழுந்துள்ளது.
புகார்:
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நாமகிரிப்பேட்டை, சின்னக்காவேரி, புதுகாலனி பகுதியில் வசித்து வருபவர் மீனா. இவர் தனது கணவர், அவரின் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமை செய்து வருவதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: IAS அதிகாரியின் மகள் வரதட்சணை கொடுமையால் தற்கொலை.. 8 மாதத்தில் கசந்த காதல் திருமணம்.!
விசாரணை:
இந்த தாக்குதல் சம்பவத்தில் மீனா காயமானதால் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டுள்ளார். காவல்துறையினர் நடத்திய விசாரணையில், புதுகாலனியைச் சேர்ந்த ஜெகதீஷ் குமார் (வயது 35), சொட்டுநீர் பாசனம் அமைக்கும் தொழில் செய்து வருகிறார்.
காதல் திருமணம்:
தமிழக வெற்றிக் கழகத்தின் சீராப்பள்ளி பேரூர் துணைச்செயலாளராக இருக்கிறார். இவரும், மீனாவும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். தம்பதிகளுக்கு 12, 6 வயதுடைய இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர்.
அவமதிப்பு:
இவர்களின் இரண்டாவது குழந்தை பிறந்ததில் இருந்து, மீனாவை ஆண் வாரிசு பெற்றுத்தர வேண்டும் என ஜெகதீஷின் குடும்பத்தினர் துன்புறுத்தி வந்துள்ளனர். மேலும், ஜெகதீஷும் அம்மாசிபாளையம் பகுதியைச் சேர்ந்த பெண்ணுடன் தொடர்பு வைத்துக்கொண்டு, அவரை வீட்டுக்கு அழைத்து வந்து மீனாவை அவமதித்து வந்துள்ளார்.
கோரிக்கை:
இந்த விஷயம் குறித்து மாமனார்-மாமியாரிடம் மீனா கேட்டபோது, ரூ.2 லட்சம் வரதட்சணை தரவில்லை என்பதால் இதுதொடர்பான பிரச்னையை எங்களிடம் கூறவேண்டாம் என தெரிவித்துள்ளார். மேலும், ஆளும் கட்சியில் ஜெகதீஷ் இருப்பதால் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என கூறப்படுகிறது. இதனால் தனக்கு உரிய நீதி வேண்டும் என மீனா தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 26 வயது மருமகளை கர்ப்பமாக்கிய 66 வயது மாமனார்.. கர்ப்பத்தால் அம்பலமான திடுக் உண்மை.. தமிழகத்தில் ஷாக்.!