×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சின்னாத்திரை நடிகை செய்த பெரிய மோசடி அம்பலம்; போலீசார் கைது

சின்னாத்திரை நடிகை செய்த பெரிய மோசடி அம்பலம்; போலீசார் கைது

Advertisement

சென்னையில் பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி அனிஷா கைது செய்யப்பட்டுள்ளார். நெசப்பாக்கத்தை சேர்ந்த அனிஷா என்கிற பூர்ணிமா பிரபல தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளினியாக உள்ளார்.

அவரும் அவரது கணவர் சக்திமுருகனும் ஸ்கை எக்யூப்மென்ட் என்ற பெயரில் வீட்டு உபயோக பொருட்களை விற்பனை செய்துவந்தனர். இந்நிலையில் கே.கே.நகரை சேர்ந்த பிரசாந்த்குமார் என்பவர் வைந்திருந்த நிறுவனத்தில் 101 வீட்டு ஏசிகளை மொத்தமாக வாங்கியுள்ளனர். அதற்கான தொகையை வங்கி காசோலையாக  செலுத்தியுள்ளார் அனிஷா. ஆனால் அந்த கணக்கில் பணம் இல்லாததால் பிரசாந்த் அவரிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் அனிஷாவோ பணம் தரமுடியாது என கூறி மிரட்டியுள்ளார்.

இதனை தொடர்ந்து கே.கே.நகர் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் நடிகை அனிஷாவையும் அவரது கணவரின் சகோதரன் ஹரிகுமாரையும் போலீசார் கைதுசெய்துள்ளனர். 

மேலும் இவர்கள் நடத்திவந்த ட்ராவல் ஏஜென்சியிலும் பல மோசடிகள் நடந்துள்ளதாகவும் போலீசாருக்கு புகார் கிடைத்துள்ளது. 

அனிஷாவின் கணவர் சக்திமுருகன் தலைமறைவாகி உள்ள நிலையில்  சக்திமுருகனை போலீசார் தேடிவருகின்றனர். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#chinnathirai #actress Anisha #101 ac
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story