×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

#JustIN: எங்கும் ஊழல், குற்றம்.. மக்கள் முடிவு பண்ணிட்டாங்க - டி.டி.வி. தினகரன் தடாலடி பேச்சு.!

TTV Dhinakaran Pressmeet: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருக்கிறது என டிடிவி தினகரன் பேட்டி அளித்தார்.

Advertisement

நயினார் போன்றவர்கள் தனிப்பட்ட விமர்சனங்களை தவிர்க்க வேண்டும் என டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.

திமுக அரசு தோல்வி தழுவும்:

TTV Dhinakaran: மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், "தனிப்பட்ட விமர்சனங்களை தவிர்ப்பது ஆரோக்கியமான அரசியலாக இருக்க முடியும். மகளிருக்கு ரூ.5000 என்ன ரூ.50000 கொடுத்தாலும், திமுக அரசு தோல்வியை தழுவும். விவசாயிகள், அரசு ஊழியர்கள், மருத்துவர்கள், இளைஞர்கள் என பலரும் திமுக அரசின் மீது கோபத்தில் இருக்கின்றனர். 

இதையும் படிங்க: "எடப்பாடி பழனிச்சாமியை அம்மாவின் ஆத்மா மன்னிக்காது... " டி.டி.வி தினகரன் பேட்டி.!!

தமிழகத்தில் எங்கும் ஊழல்:

கூலிப்படை, கஞ்சா விற்பனை என சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருக்கிறது. காவலர்களுக்கு கூட பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. சிறுகுழந்தைகள் முதல் வயதான மூதாட்டிகள் வரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகின்றனர். தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. எங்கும் ஊழல் என்ற நிலை தொடர்ந்து வருகிறது" என பேசினார்.

நயினாருக்கு ஆலோசனை:

முன்னதாக டிடிவி தினகரனிடம் தவெக தலைவர் விஜய் குறித்து பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்த சர்ச்சை கருத்து குறித்து கேட்கப்பட்டது. இந்த கருத்துக்கு பதில் சொல்ல விருப்பமில்லாத டிடிவி தினகரன், நயினார் போன்றவர்கள் தனிப்பட்ட விமர்சனத்தை தவிர்க்க வேண்டும் என பதில் அளித்தார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#TN politics #ttv dhinakaran #டிடிவி தினகரன் #மதுரை #தமிழக அரசியல்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story