×
 
☰
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சுடுகாட்டில் எரிந்த மண்டை ஓடு இல்லாத எலும்புக்கூடு! பக்கத்தில் பாசிமாலை, சிவப்பு நிற சேலை துண்டுகள்.. நாளு பக்கமும் எலுமிச்சை பழம்! பற்களை வைத்துத் துப்பறியும் மர்மம்..! திருச்சியைக் உலுக்கிய திடுக்கிடும் சம்பவம்..!!!

திருச்சி மண்ணச்சநல்லூர் அருகே சுடுகாட்டில் பெண்ணின் எலும்புக்கூடு மீட்கப்பட்ட வழக்கில், 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிசிடிவி பதிவுகளும் ஆய்வு செய்யப்படுகின்றன.

Advertisement

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள வாழ்மால்பாளையம் கீழூர் கிராம சுடுகாட்டில், முழுமையாக எரிக்கப்பட்ட நிலையில் பெண்ணின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 7ஆம் தேதி காலை எலும்புகள் கிடப்பதைப் பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு சென்ற போலீசார், மர்ம மரணம் தொடர்பாக விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

எலும்புக்கூடு அருகே சேலைத் துண்டுகள், மண்பானை

சம்பவ இடத்தில் மண்டை ஓடு இல்லாத எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது. அதன் அருகே எரிந்த நிலையில் பாசிமாலை, சிவப்பு நிறச் சேலைத் துண்டுகள், புதிய பச்சை நிற மண்பானை ஆகியவையும் இருந்ததாகக் கூறப்படுகிறது. திருச்சி அரசு மருத்துவமனையில் நடத்தப்பட்ட முதற்கட்ட மருத்துவப் பரிசோதனையில், எலும்புகள் 20 முதல் 40 வயதுக்குட்பட்ட பெண்ணுடையதாக இருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. அந்தப் பெண்ணுக்குத் திருமணமாகி குழந்தை இருந்திருக்க வாய்ப்புள்ளதாகவும் மருத்துவர்கள் கணித்துள்ளனர்.

இதையும் படிங்க: ஷாக்.. திடீரென கிளம்பிய கரும்புகை..! அடுத்த நொடியே பற்றி எரிந்த வெற்றிப்பயண பேருந்து...! நொடிப்பொழுதில் உயிர் தப்பிய 30 பெண் பயணிகள்...!!!

டிஎன்ஏ பரிசோதனையில் சிக்கல்; 3 தனிப்படைகள் அமைப்பு

உடல் முழுவதும் எரிந்துள்ளதால் டிஎன்ஏ பரிசோதனை மூலம் அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தகட்ட ஆய்வுக்காகப் பெண்ணின் பற்கள் தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே, திருச்சி சரக டிஐஜி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில், ஜீயபுரம் டிஎஸ்பி தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சம்பவ இடத்தைச் சுற்றியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். திருச்சி மற்றும் அண்டை மாவட்டங்களில் அண்மையில் காணாமல் போன இளம்பெண்கள் குறித்த புகார்களையும் ஒப்பிட்டுப் பார்த்து வருகின்றனர்.

நான்கு திசைகளிலும் எலுமிச்சம்பழங்கள்: பல்வேறு கோணங்களில் விசாரணை

எலும்புக்கூடு கிடந்த இடத்தின் நான்கு திசைகளிலும் எலுமிச்சம்பழங்கள் வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுவது கிராம மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நரபலி தொடர்பான சந்தேகங்களும் எழுந்துள்ளன. ஆனால், இதுவரை அத்தகைய தகவலை உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் வெளியாகவில்லை. எலுமிச்சம்பழங்களை அங்கு வைத்தது யார், அது வழக்கின் தடயங்களை மறைக்கச் செய்யப்பட்ட செயலா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர். பெண்ணின் அடையாளம் மற்றும் மரணத்திற்கான காரணம் குறித்து விசாரணையின் முடிவில்தான் தெளிவு கிடைக்கும்.

 

இதையும் படிங்க: மகளிருக்கு 20 நாளில் 2 முறை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் பணம்...! தமிழக அரசின் ஹாப்பி நியூஷ்..!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#திருச்சி எலும்புக்கூடு #மண்ணச்சநல்லூர் மர்ம மரணம் #Trichy Police Investigation #Woman Skeleton Case #சிசிடிவி ஆய்வு
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story