தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அலைபாய்ந்த மனதை கட்டுப்படுத்தாத காவலரும், 2 அப்பாவி மனைவியும், 1 கள்ளகாதலியும்...!

அலைபாய்ந்த மனதை கட்டுப்படுத்தாத காவலரும், 2 அப்பாவி மனைவியும், 1 கள்ளகாதலியும்...!

Trichy T Pettai Police Officer Naveen Dismiss From Job He Illegally 1 Marriage and Affair Advertisement

அன்பான மனைவி, பிள்ளைகள் இருந்தும், அலைபாய்ந்த ஆசையால் 2 ஆவது திருமணம் செய்த காவல் அதிகாரி, மூன்றாவதாக கள்ளக்காதல் வயமடைந்த போது கையும் களவுமாக சிக்கிக்கொண்டார்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள  தாத்தையங்கார்ப்பேட்டை (தா. பேட்டை) பகுதியை சார்ந்தவர் நவீன் (வயது 33). இவர் சிறுகனூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த 2013 ஆம் வருடத்தில் நவீனுக்கு முறைப்படி திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்கு பின்னர் மனைவி மற்றும் பெற்றோருடன் வசித்து வந்த நவீனுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். 

இதனிடையே, நவீனிற்கும் - வேறு பெண்ணுக்கும் இடையே காதல் மலர, முதல் மனைவிக்கு தெரியாமல் பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளனர். இந்த பெண்ணை முசிறி காவலர் குடியிருப்பில் தங்க வைத்து குடும்பமும் நடத்தி வந்துள்ளார். இரண்டாவது மனைவிக்கும் - நவீனுக்கும் 2 குழந்தைகள் உள்ளனர். 

trichy

இந்த நிலையில், சிறுகனூர் காவல் நிலையத்திற்கு நவீன் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அங்கு, மூன்றாவதாக ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்படவே, அவருடன் குடும்பம் நடத்த 2 ஆவது மனைவியின் வீட்டிற்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த இரண்டாவது மனைவி விசாரித்த போது, கணவருக்கு மற்றொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. 

இதனால் அதிர்ச்சியடைந்த பெண்மணி ஐ.ஜி அலுவலகத்திற்கு சென்று புகார் அளிக்கவே, ஐ.ஜி இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். இதன்பேரில், புகார் தொடர்பாக விசாரணை நடந்துள்ளது. விசாரணையில், நவீன் ஏற்கனவே இரண்டு திருமணம் செய்துள்ளதும், மூன்றாவதாக பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருந்து வந்ததும் உறுதியானது. இதனையடுத்து, காவல் அதிகாரி நவீனை பணிநீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#trichy #T Pettai #tamilnadu #police #Affair #marriage #Investigation #Dismiss
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story