#Breaking: திருச்சியில் வானிலேயே வட்டமடிக்கும் விமானம்.. சக்கரத்தில் கோளாறால் அதிர்ச்சி.. பயணிகள் நிலை என்ன?
திருச்சி விமான நிலையத்தில் விமானம் வானில் வட்டமடித்து வருகிறது.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து துபாய் புறப்பட்ட விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தரையிறங்க முடியாமல் திருச்சியை சுற்றி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருச்சியில் தரை இறங்க முடியாமல் ஏர் இந்திய விமானம் 1 மணிநேரம் வானில் வட்டமடித்து வருகிறது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணம் செய்த பயணிகள் இதனால் அச்சத்தில் உறைந்து இருக்கின்றனர். விமானம் புறப்பட்ட பின்னர் தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்ட நிலையில், விமானத்தை தரையிறக்க விமானி முயற்சிகளை எடுத்து வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
துபாய் புறப்பட்ட விமானம்:
திருச்சி விமான நிலையத்தில் இருந்து சென்னை, கோவை என உள்நாடு சேவையும், மலேஷியா, சிங்கப்பூர், துபாய், இலங்கை என வெளிநாடு விமான சேவையும் வழங்கப்படுகிறது. இதனிடையே, இன்று மதியம் சுமார் 12:45 மணியளவில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் துபாய்க்கு புறப்பட்டது. இந்த விமானம் 160 பயணிகளுடன் புறப்பட்டுச் சென்றது.
இதையும் படிங்க: நடுவானில் பறந்த விமானத்தில் பற்றி எரிந்த தீ! அலறி கூச்சலிட்ட பயணிகள்... வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!
திருச்சி வானில் விமானம் வட்டமடிக்கிறது:
விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்ட நிலையில், விமானம் தரையிறங்க அனுமதி கோரப்பட்டது. ஆனால், விமானத்தின் சக்கரத்தில் கோளாறு இருப்பதால், விமானத்தை தரையிறக்க முடியாமல் விமானி தொடர்ந்து வானில் திருச்சியை வட்டமிட்டபடி விமானத்தை இயக்கி வருகிறார். மேற்படி களநிலவரங்கள் காத்திருக்கின்றன.
வானில் பறக்கும் விமானம் தொடர்பான களத்தகவல்: