×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நான் ரொம்ப குண்டா இருக்கேனாம்மா?.. யூடியூப் பார்த்து 13 வயது சிறுமி தற்கொலை.. திருச்சியில் பேரதிர்ச்சி.!

நான் ரொம்ப குண்டா இருக்கேனாம்மா?.. யூடியூப் பார்த்து 13 வயது சிறுமி தற்கொலை.. திருச்சியில் பேரதிர்ச்சி.!

Advertisement

யூடியூபை பார்த்து 13 வயது சிறுமி தற்கொலை செய்துகொண்ட விவகாரம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி நகரில் உள்ள கண்டோன்மெண்ட் அலெக்ஸாண்ட்ரியா சாலையை சேர்ந்தவர் சர்மிளா. இவர் திருச்சி எஸ்.பி.ஐ வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரின் கணவர் புருஷோத்தமன். இந்த தம்பதிகள் கடந்த சில வருடமாகவே பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். இவர்களின் 13 வயது மகள், திருச்சியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் படித்து வருகிறார். 

பெற்றோர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதால், சிறுமி தனது தாயுடன் வசித்து வருகிறார். நேற்று காலை மாணவியின் தாய் வேலைக்கு சென்றுவிட்ட நிலையில், மாலையில் வீட்டிற்கு வந்து பார்த்துள்ளார். அப்போது, கதவை நீண்ட நேரம் தட்டியும் திறக்காத நிலையில், ஜன்னல் வழியாக எட்டி பார்த்துள்ளார். அப்போது, மகள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது. 

பின்னர், இதுகுறித்து கண்டோன்மெண்ட் காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், சிறுமி தனது தாயாரிடம் உடல் பருமனாக உள்ளது என கூறி கவலைப்பட்டுள்ளார். 

தாய் மகளிடம் உட்கார்ந்து பேசி அறிவுரை கூறி, அவரின் மனதை மாற்றி இருக்கிறார். இருந்தாலும், மனதளவில் மாற்றம் இல்லாமல் இருந்த சிறுமி தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. மேலும், சிறுமி யூடியூப் பார்த்து தற்கொலை செய்வது எப்படி என தெரிந்துகொண்டு தூக்கில் தொங்கியுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#trichy #tamilnadu #suicide #police #Investigation #Minor Girl #Youtube
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story