சிக்கிய 500 லிட்டர் கள்ளச்சாராய ஊறல்.!! தப்பியோடிய குற்றவாளி..!!
சிக்கிய 500 லிட்டர் கள்ளச்சாராய ஊறல்.!! தப்பியோடிய குற்றவாளி..!!
சேலம் மாவட்டத்திற்கு உட்பட்ட கல்வராயன் மலைப்பகுதி மற்றும் சேர்வராயன் மலைப்பகுதிகளில் காவல் கண்காணிப்பாளர் சிவகுமார் தலைமையில் குழு அமைக்கப்பட்டு கள்ளச்சாராயம் காய்ச்சும் கும்பலை பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி சம்பவ தினத்தன்று காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தார்கள். அப்பொழுது நாவலூர் மலைப்பகுதியில் சோதனை மேற்கொண்ட போது, அங்கு குப்பன் என்பவருக்கு சொந்தமான விவசாயம் நிலம் ஒன்று உள்ளது.
அந்த நிலத்தில் கள்ள சாராயம் காய்ச்சுவதற்கான ஊரல் இருப்பதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து காவல்துறையினர் விவசாய தோட்டத்தில் சோதனை நடத்தினார்கள். அப்பொழுது அங்கு 500 லிட்டர் கள்ள சாராயம் ஊரல் மூன்று பேரல்களில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை கைப்பற்றிய காவல் துறையினர் அதே பகுதியில் கீழே தள்ளிவிட்டு, பொருட்களை உடைத்து எறிந்தனர். பின்னர் விவசாய நிலத்திற்கு சொந்தக்காரரான குப்பனையும் காவல்துறை வழக்கு பதிவு செய்து தேடி வருகிறது.