×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தீபாவளி கொண்டாடிவிட்டு ஊர் திரும்பும்போது நேர்ந்த சோகம்.. அதிர்ச்சியில் குடும்பத்தினர்..!

தீபாவளி கொண்டாடிவிட்டு ஊர் திரும்பும்போது நேர்ந்த சோகம்.. அதிர்ச்சியில் குடும்பத்தினர்..!

Advertisement

பங்காளப்புதுரை சேர்ந்த ஐந்து பேர் தீபாவளி கொண்டாடுவதற்காக காரில் தங்கள் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். பின்னர் தீபாவளி முடிந்து மீண்டும் தாங்கள் தங்கி இருக்கும் இடத்திற்கு செல்வதற்காக காரில் ஊர் திரும்பி உள்ளனர்.

அப்போது காரானது ஈரோடு மாவட்டம் சின்னனூர் கிராமம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த மரத்தின் மீது அதிவேகமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாயினர்.

மேலும் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட மற்றொரு நபர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனையடுத்து இந்த விபத்து குறித்து போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அங்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தீபாவளி கொண்டாடிவிட்டு ஊர் திரும்பும் போது விபத்தில் சிக்கி நான்கு பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#accident #died #Investigation
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story