தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பெற்றோர் கண்முன்னே 4 வயது குழந்தைக்கு நேர்ந்த விபரீதம்..கதறி துடித்த பெற்றோர்..!

பெற்றோர் கண்முன்னே 4 வயது குழந்தைக்கு நேர்ந்த விபரீதம்..கதறி துடித்த பெற்றோர்..!

Tragedy happened to a 4-year-old child in front of his parents..Parents were crying..! Advertisement

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் மொளசி அருகிலுள்ள முனியப்பம் பாளையத்தில் கூலி தொழிலாளியான வேலுசாமி தனது மனைவி சசிகலாவுடன் வசித்து வந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இலக்கியா, அதன்யாஶ்ரீ என்ற இரண்டு மகள்களும் சபரீசன் என்ற மகனும் உள்ளனர். 

இந்நிலையில் வேலுசாமி சம்பவத்தன்று ஜேடா்பாளையம், ஜமீன்இளம்பள்ளி அருகிலுள்ள கள்ளுக்கடைமேடு பகுதிக்கு வேலைக்கு சென்றுள்ளார். அவர் வேலை முடிந்ததும் கள்ளுக்கடைமேடு பேருந்து நிலையத்தில் தனது மனைவிக்காக காத்து கொண்டிருந்தார். இதனை தொடர்ந்து  கள்ளுக்கடைமேடு பேருந்து நிலையத்தில் சசிகலா பேருந்திலிருந்து தனது 3 குழந்தைகளுடன் கீழே இறங்கியுள்ளார்.

4 year child died

பின்னர் எதிர் திசையில் நின்றுகொண்டிருந்த தன் தந்தையை பார்த்த அதன்யாஶ்ரீ வேகமாக அவரை நோக்கி ஓடி சாலையை கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஜேடா்பாளையத்தில் இருந்து பெருந்துறை நோக்கி சென்று கொண்டிருந்த ஏ.டி.எம். இயந்திரத்திற்கு பணம் நிரப்பும் வாகனம் குழந்தை அதன்யாஸ்ரீ மீது மோதியுள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட அதன்யாஸ்ரீ சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனை பார்த்த அதன்யாஶ்ரீயின் பெற்றோர் அதிர்ச்சியடைந்து அழுது துடித்துள்ளனர். இதனை தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து அங்கு வந்த ஜேடா்பாளையம் காவல் துறையினர் குழந்தை அதன்யாஶ்ரீயின் உடலை கைப்பற்றி வேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பி சென்ற வாகன ஓட்டுநரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#4 year child died #accident #Investigation
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story