கணவர் ஜெயிலுக்கு சென்றதால் நேர்ந்த சோகம்... மகளைக் கொன்று தானும் தூக்கு போட்டு தற்கொலை...!!
கணவர் ஜெயிலுக்கு சென்றதால் நேர்ந்த சோகம்... மகளைக் கொன்று தானும் தூக்கு போட்டு தற்கொலை...!!
நாகை ஆரியநாட்டு தெரு சுனாமி குடியிருப்பில் வசித்து வருபவர் ஜம்புகேஸ்வரன்(35). இவரது மனைவி மகேஸ்வரி(30). இவர்களுக்கு, மகன் ரோகித்(12), மகள் அப்ஷனா(11) உள்ளனர். அப்ஷனா அந்த பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த 2002-ஆம் வருடம் டிசம்பர் 11-ஆம் தேதி நடந்த ஒரு கொலை வழக்கில் ஜம்புகேஸ்வரன் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் உள்ளார். இதனால் அவரது மகன் ரோகித், அதே பகுதியில் இருக்கும் மகேஸ்வரின் தங்கை அமுதா வீட்டில் வளர்ந்து வருகிறார்.
கணவர் சிறையில் இருப்பதால், மகேஸ்வரி நாகை நகராட்சியில் வீடு வீடாக சென்று டெங்கு காய்ச்சல் குறித்து கணக்கெடுத்து மருந்து, மாத்திரை வழங்கும் தற்காலிக வேலை செய்து வந்தார். கடந்த மூன்று வருடங்களாக எந்த வேலையும் இல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.
கணவர் சிறையில் இருப்பதால், வருமானம் எதுவும் இல்லாததால், மகேஸ்வரி பணம் இல்லாமல் குடும்பம் நடந்த மிகவும் சிரமப்பட்டார். இதனால் கடந்த சில மாதங்களாக மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் இன்று காலை 9.30 மணிக்கு அமுதா, அக்கா மகேஸ்வரி வீட்டில் இருந்த அவரது செல்போனை எடுப்பதற்காக வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவு அருகே நின்று அக்காவை அழைத்துள்ளார். நீண்ட நேரமாக எந்த பதிலும் வராததால், உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் உள்ள மின்விசிறியில் மகேஸ்வரியும், மகள் அப்ஷனாவும் ஒரே சேலையில் தூக்கில் தொங்கியவாறு இருந்தனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த அமுதா நாகை வெளிப்பாளையம், காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று மகேஸ்வரி, அப்ஷனா இருவரின் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில், கணவர் சிறையில் இருப்பதால் குடும்பம் நடத்த வழியில்லாமல் மகள் அப்ஷனாவை சேலையில் தூக்கு போட்டு கொலை செய்து விட்டு மகேஸ்வரியும் அந்த சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.