×
 
☰
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இரு சக்கர வாகனத்தில் இருந்து விவசாயி தவறி விழுந்து பலியான சோகம்.!

இரு சக்கர வாகனத்தில் இருந்து விவசாயி தவறி விழுந்து பலியான சோகம்.!

Advertisement

விருதுநகா் மாவட்டம் ஆலங்குளம் அருகில் உள்ள மேலாண்மாட்டை பகுதியில் வசித்து வருபவர் சேகர். இவர் அதே பகுதியில் விவசாயம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் தென்காசி   கரிவலம்வந்தநல்லூருக்கு சென்றிருந்த சேகர் தனது வீட்டிற்கு  இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்போது சத்திரப்பட்டி அருகே அவர் சென்று கொண்டிருந்தபோது நிலை தடுமாறி இருசக்கர வாகனத்தில் இருந்து சேகர் தவறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தார்.

இதனையடுத்து அங்கிருந்தவர்கள் சேகரை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனா். அங்கு மருத்துவர்கள் அவருக்கு முதலுதவி செய்து பின் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த சேகர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து கரிவலம்வந்தநல்லூா் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Person fell #From two-wheeler #died #Investigation
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story