சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தனுக்கு கொரோனா தொற்று உறுதி.!
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் மீண்டும் இரண்டாவது அலையாக தீவிரமாக பரவ துவங்கியுள்ளது. க
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் மீண்டும் இரண்டாவது அலையாக தீவிரமாக பரவ துவங்கியுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். சாமானிய மக்கள் முதல் முன்கள பணியாளர்கள் வரை கொரோனாவுக்கு எபாதிப்படைந்து வரும் சம்பவம் நிகழ்ந்து வருகிறது.
சமீப காலமாக கொரோனா தொற்றால் மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், அமைச்சர்கள், சினிமா பிபரலங்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தேர்தல் பிரச்சாரத்துக்கு பிறகு அரசியல் தலைவர்கள் பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்துவரும் நிலையில், தற்போது சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ‘எனக்கு கொரோனா தொற்று உள்ளது. எனவே நான் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டேன். என்னுடன் தொடர்புடையவர்களும் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்’ என்று கூறியுள்ளார். ஏற்கனேவே குன்னம் தொகுதியின் எம்எல்ஏ-வும் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சருமான எஸ்.எஸ்.சிவசங்கர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.