×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

முதல்வர் விஜய்யின் பிரபலத்தை பார்த்தீங்களா.... டோக்கியோ உணவக ஊழியர் செய்த செயலை பாருங்க! வைரலாகும் வீடியோ....!!!

டோக்கியோ உணவகத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண்ணிடம் பேசிய ஊழியர், முதலமைச்சர் விஜய்யின் ஐகானிக் போஸை செய்து காட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

ஜப்பான் நாட்டின் டோக்கியோவில் உள்ள ஒரு உணவகத்தில் நடந்த சுவாரஸ்யமான சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த நித்யா ராமச்சந்திரன் என்ற பெண் அங்கு உணவருந்தச் சென்றபோது, உணவக ஊழியரின் ஒரு செயல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக, விஜய் தளபதி பெயர் டோக்கியோ வரை சென்றிருப்பது குறித்து தமிழக வெற்றிக் கழகத்தினர் உற்சாகமாக பதிவிட்டு வருகின்றனர்.

“தமிழ்நாடு தெரியுமா?” என்ற கேள்வி

தகவலின்படி, டோக்கியோவில் உள்ள அந்த உணவகத்தில் நித்யா ராமச்சந்திரனிடம் பணியாளர் ஒருவர் “நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று கேட்டுள்ளார். அதற்கு அவர் “தமிழ்நாடு தெரியுமா?” என்று எதிர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையடுத்து, ஒரு நொடியும் யோசிக்காமல் அந்த ஊழியர் “ஆமாம்... எனக்குத் தெரியும்... விஜய் தளபதி!” என்று உற்சாகமாக பதிலளித்துள்ளார். அதோடு மட்டுமல்லாமல், விஜயின் பிரபலமான ஐகானிக் போஸையும் செய்து காட்டியுள்ளார்.

இதையும் படிங்க: ஓட்டு கேட்டு வந்த திமுகவை தெறித்து ஓடவிட்ட குழந்தை! இங்க வராதீங்க.... எங்க ஓட்டு TVK க்கு தான்....! சிறுமியின் துணிச்சலான வீடியோ!!!

சமூக வலைதளங்களில் வைரல்

இந்த காட்சியை அங்கிருந்தவர்கள் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். பின்னர் அது சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட நிலையில், தற்போது வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக தமிழக வெற்றிக் கழக ஆதரவாளர்கள் இந்த வீடியோவை அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.

தமிழக முதலமைச்சராக பதவியேற்ற பிறகு விஜயின் சர்வதேச கவனம் மேலும் அதிகரித்துள்ளதாகவும், ஜப்பான் வரை அவரது பெயர் பரவியுள்ளது என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், “தமிழ்நாட்டைச் சொன்னவுடன் விஜய் நினைவுக்கு வந்திருப்பது பெருமை” என பதிவிட்டு வருகின்றனர். சிலர், “சினிமா மூலம் உருவான உலகளாவிய அடையாளம் இது” என்றும் கருத்து பகிர்ந்துள்ளனர்.

 

இதையும் படிங்க: இந்த அன்பு வேற யாருக்கும் கிடைச்சது இல்ல! அண்ணன்கள் பட்டியலில் உள்ள முதல் பெயரை பாருங்க... வைரலாகும் அந்த பத்திரிக்கை புகைப்படம்!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#vijay #Tokyo Viral Video #தமிழ்நாடு #TVK #Japan Restaurant
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story