தங்கம் வாங்க தயங்கும் பொதுமக்கள்.! என்ன காரணம்.? இன்றைய தங்கத்தின் விலை.!
இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ. 8 விலை குறைந்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தலால் உலக பொருளாதாரம் மந்த நிலையில் உள்ள நிலையில் பிற தொழில்களில் முதலீடு செய்ய பலரும் தயங்கி, தங்கத்தில் அதிக முதலீடு செய்ய தொடங்கினர். இதன்காரணமாக தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து வந்தது. கொரோனா சமயத்தில் தங்கம் விலை ரூ.40 ஆயிரத்தை தாண்டியது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, விலை குறைந்தாலும், கடந்த சில வாரங்களாக ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது.
இந்தநிலையில், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.8 குறைந்து ரூ.37,712-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.1 குறைந்து ரூ.4,714-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் தங்கம் விலை குறையுமா அல்லது அதிகரிக்குமா என்ற குழப்பத்தில் பொதுமக்கள் தங்கம் வாங்க தயக்கம் காட்டுகின்றனர்.