×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கவிஞர், விடுதலை போராட்ட வீரர், தமிழ்மொழி பற்றாளர் மகாகவி பிறந்தநாள் இன்று..!

கவிஞர், விடுதலை போராட்ட வீரர், தமிழ்மொழி பற்றாளர் மகாகவி பிறந்தநாள் இன்று..!

Advertisement

கவிஞர், இதழ் ஆசிரியர், எழுத்தாளர், விடுதலை போராட்ட வீரர், சமூக சீர்திருத்தவாதி மகாகவி பாரதியார். இவர் டிசம்பர் 11 ஆம் தேதி 1882 ஆம் வருடம் இப்பூவுலகில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி ஆகும். 

சின்னசாமி ஐயர் - இலட்சுமி அம்மாள் தம்பதியின் மகனாக மகாகவி பாரதியார் பிறந்தார். சுப்பையா என்றும் அன்போடு குடும்பத்தினரால் அழைக்கப்பட்ட மகாகவி, தனது தாயாரின் மறைவுக்கு பின்னர் பாட்டி பாகீரதி அம்மாளின் பராமரிப்பில் வளர்ந்தார். 

பள்ளியில் படிக்கும் போதே கவிப்புலமையை வெளிப்படுத்திய மகாகவி, செல்லம்மாள் என்ற பெண்ணை திருமணம் செய்தார். இதன்பின்னர், அவரது குடும்பத்தை வறுமைவாட்ட, எட்டயபுரம் மன்னருக்கு கடிதம் எழுதி, அன்றைய அரசவையில் அரண்மனையில் வேலையும் கொடுக்கப்பட்டது. ஆனால், சில மாதம் கழித்து, அவ்வேலையை துறந்து காசிக்கு சென்றார். 

1898 ஆம் வருடம் முதல் 1903 ஆம் வருடம் வரை பாட்டெழுத்தாமல் இருந்த மகாகவி, கடந்த 1904 ஆம் வருடம் விவேகபானு இதழில் அவரது பாடல்கள் வெளியானது. இதழ் ஆசிரியராக பணியாற்றிய மகாகவி, மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியராகவும் பணியாற்றினார். இவர்  தமிழ், ஆங்கிலம், இந்தி, சமசுகிருதம், வங்காளம், பிரான்ஸ் மொழி போன்றவற்றில் புலமைபெற்றும் இருந்தார். 

தாயமொழியின் மீது தீராத காதல் கொண்ட பாரதி, பல மொழிகளில் புலமைபெற்று இருந்தாலும் "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்" என்று பாடினார். பாரதியின் விடுதலை புரட்சி பாடலுக்கு அன்றைய பிரிடிஷ் பர்மா மாகாண அரசு தடை விதிக்கவே, அதனைத்தொடர்ந்து மெட்ராஸ் மாகாண அரசும் தடையை விதித்தது. அன்றைய காலத்திலேயே நதிநீர் இணைப்பையும் பேசினார். 

கடந்த 1905 ஆம் வருடம் ரஷியாவில் ஜார் மன்னன் தன்னிடம் மனுவலிக்க வந்த மக்களை கொன்று குவிக்க, அதற்கு கடும் கண்டனம் தெரிவித்த பாரதி, தனது பாடலால் எதிர்ப்பை காண்பித்து இருந்தார். பின்னர், கடந்த 1917 ஆம் வருடம் ரஷியாவில் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி நடந்து, ஜார் மன்னனின் ஆட்சி அகற்றப்பட்டு, கெரன்ஸ்கி தலைமையில் அரசு அமைக்கப்பட்டது. 

பெண்ணுரிமையை அன்றே கேட்டு குரல் கொடுத்த மகாகவி, அதற்காக பல பாடல்களையும் எழுதியுள்ளார். அவரின் பிறந்தநாள் இன்று. அவரின் சிறப்புகளை போற்றி வணங்குவோம். 

“மாகாளி பராசக்தி உருசிய நாட்
டினிற் கடைக்கண் வைத்தாளங்கே
ஆகாவென் றெழுந்தது பார் யுகப்புரட்சி
கொடுங்கோலன் அலறி வீழ்ந்தான்...”

தேடிச் சோறு நிதந் தின்று
பல சின்னஞ் சிறு கதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிக் கிழப்பருவம் எய்தி
கொடுங் கூற்றுக் கிரை யெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Subramania Bharati #birthday #India #tamilnadu #Thoothukudi
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story