குட் நியூஷ்! 10, 11, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் புதிய மாற்றம்! இவர்களுக்கு தேர்வு எழுதும்போது இனி கூடுதல் நேரம் தரப்படும்! பள்ளிக் கல்வித்துறை அதிரடி..!!!
2026 பொதுத்தேர்வில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கூடுதல் நேரம் மற்றும் துணை எழுத்தாளர் உள்ளிட்ட புதிய சலுகைகளை தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் நடைபெறும் பொதுத்தேர்வுகளில் அனைத்து மாணவர்களுக்கும் சம வாய்ப்பை உறுதி செய்வதற்காக பள்ளிக் கல்வித்துறை தொடர்ந்து பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகிறது. அந்த வகையில், 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுத்தேர்வுகளை முன்னிட்டு மாற்றுத்திறனாளி மாணவர்கள் சிரமமின்றி தேர்வு எழுத உதவும் வகையில் புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
பொதுத்தேர்வுக்கான புதிய வழிகாட்டுதல்
2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு இந்த வழிகாட்டுதல்கள் அமல்படுத்தப்படுகின்றன. தேர்வு எழுதும் போது மாற்றுத்திறனாளி மாணவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை குறைத்து, அவர்களின் கல்விச் செயல்திறனை மேம்படுத்தும் நோக்கத்திலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தேர்வுக்கு கூடுதல் நேரம்
புதிய விதிகளின்படி, கற்றல் குறைபாடு, பார்வைத்திறன் குறைபாடு, தசைநார் சிதைவு உள்ளிட்ட பல்வேறு உடல் மற்றும் கற்றல் பாதிப்புகளைக் கொண்ட மாணவர்களுக்கு தேர்வு எழுத கூடுதல் நேரம் வழங்கப்படும். மூன்று மணி நேரத் தேர்வுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம், அதாவது மொத்தம் நான்கு மணி நேரம் வழங்கப்படும். அதேபோல் இரண்டரை மணி நேரத் தேர்வுகளுக்கு கூடுதலாக 50 நிமிடங்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஹாப்பி நியூஷ்! 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.10,000.... தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.!!!
துணை எழுத்தாளர் மற்றும் தனி அறை வசதி
கைகளால் எழுத முடியாத மாணவர்களுக்கு தேர்வின்போது துணை எழுத்தாளர் (Scribe) நியமிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக மாணவர்கள் தனி அறைகளில் தேர்வு எழுதும் வசதி ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்றும், அவர்கள் தரைதளத்தில் அமைந்த அறைகளிலேயே தேர்வு எழுதுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் துணை எழுத்தாளர்களுக்கான தகுதி மற்றும் விதிமுறைகளையும் அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
மருத்துவச் சான்றிதழ் அவசியம்
இந்த சலுகைகளை பெற மாணவர்கள் உரிய மருத்துவச் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வியில் சமத்துவத்தை உறுதி செய்யும் இந்த புதிய விதிமுறைகள் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளன.
கல்வி அனைவருக்கும் சமமாக கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த மாற்றங்கள், மாற்றுத்திறனாளி மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் சூழலை உருவாக்கும் முக்கிய முயற்சியாகக் கருதப்படுகிறது.
இதையும் படிங்க: BREAKING: மகிழ்ச்சி செய்தி! மாணவர்களுக்கு கோடை விடுமுறை.... தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!!!