×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அடுத்தக்கட்டமாக ரேஷன் கார்ட்டில் கை வைத்த முதல்வர் விஜய்! மகளிர் உரிமைத்தொகை மாதம் ரூ.2500....தமிழக அரசின் ரகசிய பிளான் கசிந்தது.!!!

தமிழகத்தில் தேர்தலால் நிறுத்தப்பட்டிருந்த புதிய ரேஷன் கார்டு சேவைகள் மீண்டும் தொடங்கியுள்ளதால், ஆயிரக்கணக்கான விண்ணப்பதாரர்களுக்கு நிம்மதி கிடைத்துள்ளது.

Advertisement

தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புதிய குடும்ப அட்டை சேவைகள் மீண்டும் தொடங்கியுள்ளன. மே 15 முதல் விண்ணப்ப பரிசீலனை உள்ளிட்ட அனைத்து பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருவதால், நீண்ட நாட்களாகக் காத்திருந்த பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால், புதிய குடும்ப அட்டை விண்ணப்பங்களை ஆய்வு செய்யும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன. தற்போது புதிய அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து நிலுவையில் இருந்த ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: மக்களே மிஸ் பண்ணிட்டாத்தீங்க.... ரேஷன் அட்டைதாரர்களே தமிழகம் முழுவதும் நாளை காலை 10 மணி முதல் 1 மணி வரை..... அரசு வெளியிட்ட அறிவிப்பு!

முழுவீச்சில் தொடங்கிய சேவைகள்

பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் செயல்படும் ரேஷன் கடைகள், தமிழக மக்களின் அன்றாட வாழ்வில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன. சென்னை உள்ளிட்ட 38 மாவட்டங்களில் இயங்கி வரும் சுமார் 34,792 கடைகள் மூலம் அரிசி, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் குறைந்த விலையிலும் இலவசமாகவும் வழங்கப்பட்டு வருகின்றன.

தற்போது தமிழகம் முழுவதும் 2 கோடியே 23 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இதன் மூலம் சுமார் 7 கோடி மக்கள் அரசின் பல்வேறு நலத்திட்ட பயன்களை பெற்று வருகின்றனர்.

ஏன் அதிகரித்தது விண்ணப்பங்கள்?

2023 முதல் 2024 ஜூலை வரை மட்டும் சுமார் 8 லட்சம் பேர் புதிய ரேஷன் கார்டு பெற விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கூட்டுக்குடும்பங்கள் தனித்தனியாகப் பிரிவது, திருமணமான பெண்கள் தனியாக வசிப்பது மற்றும் அரசின் சமூக நலத்திட்டங்களைப் பெற தனி அட்டை தேவைப்படுவது போன்ற காரணங்களால் விண்ணப்பங்கள் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பிப்பதுடன், பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தச் சேவைகளும் தற்போது மீண்டும் சீராக நடைபெற்று வருகின்றன.

2500 ரூபாய் திட்டம் விரைவில்?

இதற்கிடையே, தேர்தல் பிரச்சாரத்தின் போது முதலமைச்சர் விஜய் அறிவித்த மகளிருக்கான மாத உதவித்தொகையை 2500 ரூபாயாக உயர்த்தும் திட்டம் குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

நடப்பு மே மாதத்திற்கான மகளிர் உரிமைத்தொகை 1000 ரூபாய் ஏற்கனவே பயனாளிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. புதிய குடும்ப அட்டை விண்ணப்பங்கள் அனைத்தும் முழுமையாக பரிசீலிக்கப்பட்டு தகுதியானவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்ட பிறகு, மாதம் 2500 ரூபாய் வழங்கும் திட்டத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

இதையும் படிங்க: குட் நியூஷ்! விரைவில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500.. நாளை வங்கி கணக்கில் வரும் பணம்! முதல்வர் விஜய்யின் அதிரடி அறிவிப்பு!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Tamil Nadu Ration Card #Family Card Services #மகளிர் உரிமைத்தொகை #Tn government #ரேஷன் கார்டு
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story