பிளஸ்-2 மாணவர்களின் பொதுத்தேர்வு..! அக்டோபர் 22 முதல் 31 வரை... தலைமை ஆசிரியர்களுக்கு பறந்த கல்வித்துறையின் அதிரடி எச்சரிக்கை..!!!
தமிழகத்தில் பிளஸ்-2 மாணவர்களின் தேர்வுப் பெயர் பட்டியல் தயாரிக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அக்டோபர் 22 முதல் 31 வரை விவரங்களைப் பதிவேற்றி, பிழைகளைச் சரிபார்த்த பிறகே தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டும்.
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வுக்கான மாணவர் பெயர் பட்டியலைத் தயாரிக்கும் பணிகளைத் தொடங்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்காக, அக்டோபர் 22 முதல் 31-ஆம் தேதி வரை மாணவர்களின் முழு விவரங்களையும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் எனப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பதிவேற்றப்படும் தகவல்களில் பிழைகள் இருந்தால், தேர்வுக் கட்டணம் செலுத்திய பிறகு திருத்த முடியாது என்பதால் கவனமாகச் செயல்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 22 முதல் 31 வரை விவரங்கள் பதிவேற்றம்
பிளஸ்-2 மாணவர்களின் தேர்வுப் பெயர் பட்டியலைத் தயாரிக்கும் வகையில், மாணவர்களின் பெயர் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அரசு நிர்ணயித்த இணையதளத்தில் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பதிவேற்ற வேண்டும். இதற்கான பணிகளை உரிய நேரத்தில் முடிக்குமாறு பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மழைநீரில் மிதக்கும் சேப்பாக்கம்..! மழை பாதிபுக்கு மத்தியில் துபாய் சென்ற உதயநிதி... கொந்தளிக்கும் CM விஜய்..!!!
பெயர்களில் பிழை இருந்தால் திருத்த வேண்டும்
மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோரின் பெயர்களில் தமிழ் எழுத்துப் பிழைகள் இருந்தால், ஏற்கெனவே உள்ள பதிவை முழுமையாக நீக்கிவிட்டு, சரியான விவரங்களுடன் மீண்டும் பதிவு செய்ய வேண்டும் என வழிகாட்டப்பட்டுள்ளது. மேலும், தேர்வில் சலுகைகள் தேவைப்படும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் தங்களது அடையாள அட்டை அல்லது மருத்துவச் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து சமர்ப்பிக்க வேண்டும். தேவையான ஆவணங்கள் முறையாகப் பதிவேற்றப்பட்டுள்ளதையும் பள்ளிகள் உறுதிசெய்ய வேண்டும்.
கட்டணம் செலுத்திய பிறகு திருத்தம் செய்ய முடியாது
மாணவர்களின் விவரங்களைப் பதிவேற்றிய பிறகு, உறுதிமொழிப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து சரிபார்க்க வேண்டும். வகுப்பாசிரியரும் தலைமை ஆசிரியரும் அனைத்து தகவல்களையும் இருமுறை சரிபார்த்துக் கையொப்பமிட்ட பின்னரே தேர்வுக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கட்டணம் செலுத்திய பிறகு விவரங்களை மாற்ற முடியாது என்பதால், ஏதேனும் பிழைகள் ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களே பொறுப்பேற்க வேண்டும். தவறுகள் கண்டறியப்பட்டால் அவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை எச்சரித்துள்ளது.
இதையும் படிங்க: எதிர்பார்பில் மக்கள்...! தவெக அரசின் முதல் பொங்கல் பரிசு என்ன..? தீபாவளி பரிசும் ரெடி..!!!