அடி தூள்! ரேஷன் கடைகளில் தீபாவளி பரிசு விநியோகம்....!முதல்வர் விஜய் அறிவித்த ஹாப்பி நியூஸ்..!!!
2026 பொங்கலில் எஞ்சிய இலவச வேட்டி, சேலைகளை தீபாவளியை முன்னிட்டு முதியோர் ஓய்வூதியத் திட்ட பயனாளர்களுக்கு வழங்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2026-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது விநியோகிக்கப்பட்டு எஞ்சிய இலவச வேட்டி சேலைகளை, தீபாவளியை முன்னிட்டு முதியோர் ஓய்வூதியத் திட்ட (OAP) பயனாளர்களுக்கு வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை உடனடியாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ரேஷன் கடைகள் மூலம் விநியோகம்
எஞ்சியுள்ள வேட்டி, சேலைகளை ரேஷன் கடைகள் வாயிலாக முதியோர் ஓய்வூதியத் திட்ட பயனாளர்களுக்கு வழங்கும் பணிகளை தொடங்க சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தீபாவளிக்கு முன்பாக தகுதியான பயனாளர்களுக்கு இந்த நலத்திட்டம் சென்றடையும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதையும் படிங்க: மகிழ்ச்சி பொங்கும் பொங்கல் பரிசு! ரேஷன் கார்டுக்கு ரூ.2,000.....! முதல்வர் ஸ்டாலினின் அதிரடி!
முதியோருக்கான பண்டிகை பரிசு
பண்டிகைக் காலத்தில் ஏழை, எளிய முதியோரின் தேவையை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் OAP பயனாளர்கள் நேரடியாக பயன்பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
பொங்கல் திட்டத்திற்கும் முன்கூட்டியே நிதி
இதற்கிடையில், 2027-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கான ரூ.300 கோடி மதிப்பிலான இலவச வேட்டி, சேலை திட்டத்திற்கும் அரசு முன்கூட்டியே நிதி ஒதுக்கியுள்ளது. உற்பத்தி மற்றும் கொள்முதல் பணிகளை முன்கூட்டியே தொடங்குவதன் மூலம், தரமான வேட்டி, சேலைகளை உரிய நேரத்தில் வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: BREAKING: மகிழ்ச்சி செய்தி.! 2027 பொங்கல் பரிசு ரூ.300 கோடி பணம் ஒதுக்கீடு... முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு!!!