அடி தூள்! இன்று வங்கி கணக்கில் ரூ.4,000 வரவு வைப்பு.... மீண்டும் முதல்வர் ஸ்டாலின் கொடுத்த பெரிய சர்ப்ரைஸ்!!! செம குஷியில் மக்கள்....!!!
முதியோர், மாற்றுத்திறனாளிகள், மீனவர்கள் உள்ளிட்ட 40 லட்சம் பேருக்கு தமிழக அரசு சிறப்பு நிதி வரவு. ரூ.4000, ரூ.3500, ரூ.3200 வழங்கியதாக முதல்வர் அறிவிப்பு.
தமிழகத்தில் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு தொடர்ச்சியாக நிதி ஆதரவு வழங்கி வரும் அரசு, தற்போது 40 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு சிறப்பு தொகை வழங்கியிருப்பதாக அறிவித்துள்ளது. நலிவுநிலையிலுள்ள மக்களுக்கு நேரடியாக வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோருக்கு நேரடி வரவு
முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின்படி, பராமரிப்பு உதவித்தொகை பெற்றுவரும் 2.58 லட்சம் மாற்றுத் திறனாளிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.4,000 இன்று காலை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. மேலும், 5.92 லட்சம் மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூ.3,500 வழங்கப்பட்டுள்ளது. சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் முதியோர் மற்றும் கைம்பெண்கள் என மொத்தம் 29.29 லட்சம் பேருக்கு தலா ரூ.3,200 வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு நிதி பயனாளிகளிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: குஷியோ குஷி! 15 லட்சம் பேருக்கு டிச- 12 முதல் ரூ.1000, பொங்கல் பரிசாக ரூ.5000...! திமுக அரசின் சூப்பர் அறிவிப்பு!
மகளிர் உரிமைத் தொகை – முன்கூட்டியே வழங்கப்பட்ட உதவி
கடந்த சில நாட்களுக்கு முன்பு கோடைக்கால சிறப்பு தொகையாக ரூ.2,000 மற்றும் மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கான மகளிர் உரிமைத் தொகை ரூ.3,000 என மொத்தம் ரூ.5,000 பெண்களின் வங்கி கணக்கில் முன்கூட்டியே வரவு வைக்கப்பட்டது. தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகும் முன்பே இந்த தொகை வழங்கப்பட்டதாக அரசு விளக்கம் அளித்தது.
மீனவர் குடும்பங்களுக்கு ரூ.8,000
ஏப்ரல் முதல் ஜூன் வரை அமல்படும் மீன்பிடித் தடைக்காலத்திற்காக 1,62,900 மீனவ குடும்பங்களுக்கு தலா ரூ.8,000 வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் கடல்சார் வாழ்வாதாரத்தை நம்பி இருக்கும் குடும்பங்களுக்கு நிதி ஆதரவு கிடைக்கிறது. மேலும், நீலகிரி மாவட்டத்தில் 14,870 தேயிலை விவசாயிகள் பயன்பெறும் வகையில், 15 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட பசுந்தேயிலைக்கு கிலோவிற்கு ரூ.2 ஆதார விலையாக மொத்தம் ரூ.8.53 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.
விளிம்புநிலையில் உள்ளோருக்கான உறுதி
மாத ஓய்வூதியம் பெற்று வரும் முதியோர், கைம்பெண்கள், வயது முதிர்ந்த திருநங்கையர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு கூடுதல் ஆதரவு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசு ஏற்றுக்கொண்டதாக முதல்வர் தெரிவித்துள்ளார். மார்ச் மாத ஓய்வூதியத்துடன் ரூ.2,000 கூடுதலாக இணைத்து வழங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் ஒருவரையும் பின்தங்க விடமாட்டோம் என்ற உறுதியை மீண்டும் வலியுறுத்தியுள்ள அரசு, சமூகநீதியை முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையாக இந்த உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. நலிவுநிலையிலுள்ள மக்களுக்கு உறுதுணையாக இருக்கும் இந்த திட்டங்கள் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: BREAKING: இன்பச் செய்தி... மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000 ஆக உயர்வு! ஒரே நாளில் ரூ. 5,000 வரவு.... முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு !!!