×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

#சற்று முன் : மக்களே மகிழ்ச்சி செய்தி.... தமிழகத்தில் அனைவருக்கும் கடன் தள்ளுபடி... தமிழக அரசு வெளியிட்ட முக்கிய தகவல்..!!!

தமிழகத்தில் 5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்துள்ள குறு, சிறு விவசாயிகளின் கூட்டுறவு பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

தமிழகத்தில் 5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்துள்ள குறு மற்றும் சிறு விவசாயிகளின் கூட்டுறவு சங்க வேளாண் பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த அறிவிப்பு வரவிருக்கும் மாநில பட்ஜெட்டில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என கூறப்படுவதால் விவசாயிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு, ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து தொடர்ந்து மக்கள் நல அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. 200 யூனிட் இலவச மின்சாரம், 717 டாஸ்மாக் கடைகள் மூடல் மற்றும் பெண்களின் பாதுகாப்புக்காக ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ அமைத்தது போன்ற நடவடிக்கைகள் பொதுமக்கள் மத்தியில் கவனம் பெற்றிருந்தன.

விவசாயிகளுக்கு நிம்மதி தரும் திட்டம்

இதையடுத்து தற்போது விவசாயிகளின் நலனை மையமாகக் கொண்டு புதிய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. குறிப்பாக கூட்டுறவு சங்கங்களில் வாங்கிய பயிர்க்கடன் சுமையால் அவதிப்பட்டு வரும் குறு, சிறு விவசாயிகளுக்கு இந்தத் திட்டம் பெரிய உதவியாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: இன்பச் செய்தி! நகைக்கடன் தள்ளுபடி... அடுத்த கட்டமாக கூட்டுறவு வங்கிகளில் ரெடியாகும் லிஸ்ட்! மக்களை மகிழ்ச்சியில் மகிழவைக்கும் தமிழக அரசு !!!

தகவலின்படி, 5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் நில விவரங்கள் மற்றும் கடன் பட்டியல்கள் தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது. இதனால், திட்டத்தின் பயனாளிகள் பட்டியல் இறுதி செய்யப்படும் பணிகளும் வேகமடைந்துள்ளதாக தெரிகிறது.

பட்ஜெட்டில் அதிகாரப்பூர்வ அறிவிப்பா?

வரவிருக்கும் புதிய மாநில பட்ஜெட்டில் இந்த முக்கிய அறிவிப்பை முதலமைச்சர் விஜய் வெளியிடுவார் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. கடன் சுமையால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை, எளிய விவசாயிகளுக்கு இது வாழ்வாதார நம்பிக்கையை ஏற்படுத்தும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

இதனால், விவசாயிகள் மத்தியில் அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை அரசியல் மற்றும் விவசாய அமைப்புகள் இந்த விவகாரத்தை உற்றுநோக்கி வருகின்றன.

 

இதையும் படிங்க: மக்களே... கவலையை விடுங்க! வங்கி கணக்கில் வருகிறது மகளிர் உரிமைத்தொகை ரூ.2500.... முதல்வர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு.!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#vijay #Farm Loan Waiver #தமிழக அரசு #விவசாயிகள் #TN Budget
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story