×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

"மறைந்த கேப்டன் விஜயகாந்தின் சொந்த ஊரில் முழு உருவச்சிலை".. தமிழ்நாடு அரசுக்கு முக்கிய கோரிக்கை.!

மறைந்த கேப்டன் விஜயகாந்தின் சொந்த ஊரில் முழு உருவச்சிலை.. தமிழ்நாடு அரசுக்கு முக்கிய கோரிக்கை.!

Advertisement

 

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராகவும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவன தலைவராகவும், முன்னாள் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்தவர் விஜயகாந்த். மக்களால் புரட்சி கலைஞர், கேப்டன் என அன்போடு அழைக்கப்படும் விஜயகாந்த், நேற்று (28 டிசம்பர் 2023) காலை உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காலமானார். 

அவரின் மறைவு தமிழகத்தை மட்டுமல்லாது, அவரால் வாழ்க்கையை தொடங்கிய வெளிமாநில திரையுலக நட்சத்திரங்களையும் வெகுவாக பாதித்தது. பலரும் நேரிலும், சமூக வலைதளப்பக்கத்திலும் தங்களின் உருக்கமான இரங்கலை பதிவு செய்து வருகின்றனர். இன்று (டிசம்பர் 29) மாலை 4 மணியளவில் விஜயகாந்தின் உடல், சென்னை கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது. 

இந்நிலையில், தமிழ்நாடு அரசுக்கு தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பில் சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதாவது, மறைந்த கேப்டன் விஜயகாந்த் வசித்து வந்த சாலிகிராமம், விருகம்பாக்கம் பகுதியில் இருக்கும் பிரதான சாலைக்கு கேப்டன் விஜயகாந்த் சாலை அல்லது புரட்சிக்கலைஞர் சாலை என பெயரிட வேண்டும்.

தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்படும் திரைத்துறை விருதில், இனி அவரின் பெயரை குறிப்பிட்டு கேப்டன் விஜயகாந்த் விருது அல்லது புரட்சிக்கலைஞர் விருது என பெயரிட்டு வழங்க ஆவண செய்ய வேண்டும். கேப்டன் பிறந்த மதுரை மாவட்டத்தின் தலைநகரில், அவரது முழு உருவச்சிலை அரசு சார்பில் நிறுவப்பட வேண்டும் என அரசுக்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Latest news #விஜயகாந்த் #vijayakanth #முழு உருவச்சிலை #captain vijayakanth #tamilnadu politics #dmdk
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story