×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

#Breaking: தமிழ்நாடு பாஜக மக்களவை தொகுதி வேட்பாளர்கள் அறிவிப்பு; அண்ணாமலை, நாகேந்திரன் போட்டி., கொண்டாட்டத்தில் தொண்டர்கள்.!

#Breaking: தமிழ்நாடு பாஜக மக்களவை தொகுதி வேட்பாளர்கள் அறிவிப்பு; அண்ணாமலை, நாகேந்திரன் போட்டி., கொண்டாட்டத்தில் தொண்டர்கள்.!

Advertisement

 

2024 மக்களவை தேர்தலில் போட்டியிட, தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையில் பாஜக, பாமக, அமமுக, த.மா.கா உட்பட பல்வேறு கட்சிகள் இணைந்து இருக்கின்றன. இவர்களுக்கான தொகுதிகளும் பிரித்து வழங்கப்பட்டன. விரைவில் அரைசியல் கட்சியினர் தங்களின் பிரச்சாரத்தில் முழுவீச்சில் ஈடுபடவுள்ளனர்.

கூட்டணியை வழிநடத்தும் பாஜக சார்பில் கோயம்புத்தூரில் அண்ணாமலை, தென்சென்னையில் தமிழிசை, மத்திய சென்னையில் வினோஜ், நீலகிரியில் எல். முருகன், கன்னியாகுமரியில் பொன். இராதாகிருஷ்ணன், தூத்துக்குடியில் நயினார் நாகேந்திரன், வேலூரில் ஏ.சி சண்முகம், கிருஷ்ணகிரியில் நரசிம்மன், பெரம்பலூரில் பாரிவேந்தர் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இந்த தேர்தலில் அண்ணாமலை முதல் முறையாக பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட களமிறங்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் பாஜக மூத்த தலைவர்களாகவும், முக்கிய புள்ளிகளாகவும் கவனிக்கப்படும் அண்ணாமலை, நயினார் நாகேந்திரன், தமிழிசை உட்பட பலரும் தேர்தலில் களமிறங்கி இருப்பது தொண்டர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamilnadu #bjp #politics #annamalai
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story