×
 
☰
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஐயோ... இப்படியா ஆகணும்! தண்ணீரில் தத்தளித்த 4 மாணவிகள்...! காப்பாற்ற சென்ற காப்பாளர்... நொடிப்பொழுதில் 5 பேரும் பரிதாப பலி! பெரும் சோகம்..!!!

திருவண்ணாமலை சமுத்திரம் ஏரியில் குளிக்கச் சென்ற அரசு பெண்கள் பாதுகாப்பு மைய மாணவிகள் 4 பேர் நீரில் மூழ்கினர். அவர்களைக் காப்பாற்ற முயன்ற காப்பாளரும் உயிரிழந்தார்.

Advertisement

திருவண்ணாமலை மாவட்டத்தில் தீபாவளி விடுமுறையைக் கழிக்க ஏரிக்குச் சென்ற அரசு பெண்கள் பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த 4 மாணவிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். அவர்களைக் காப்பாற்ற முயன்ற விடுதிக் காப்பாளரும் தண்ணீரில் சிக்கினார். ஒரே நேரத்தில் 5 பேர் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விடுமுறையைக் கழிக்க ஏரிக்குச் சென்ற மாணவிகள்

திருவண்ணாமலை பெரும்பாக்கம் சாலை அருகே அரசு பெண்கள் பாதுகாப்பு மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு தங்கிப் படித்து வந்த மாணவிகள், தீபாவளி விடுமுறையை முன்னிட்டு வெளியே செல்ல விரும்பியுள்ளனர். இதையடுத்து, விடுதிக் காப்பாளர் தென்மொழியுடன் விஜயலட்சுமி, அல்லி, பூமிகா, வள்ளியம்மாள் ஆகிய 4 மாணவிகளும் சமுத்திரம் ஏரிக்குச் சென்றுள்ளனர்.

இதையும் படிங்க: செல்போனைப் அதிகம் யூஸ் பண்ணாதேன்னு சொன்ன தந்தை! மனமுடைந்து வீட்டை விட்டு வெளியேறிய 8-ம் வகுப்பு மாணவன் செய்த அதிர்ச்சி செயல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்...!!!

அங்கு அனைவரும் ஏரியில் இறங்கிக் குளித்துக் கொண்டிருந்தபோது, மாணவிகள் ஒவ்வொருவராக ஆழமான பகுதிக்குச் சென்று நீரில் மூழ்கத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.

மாணவிகளைக் காப்பாற்ற முயன்ற காப்பாளரும் பலி

மாணவிகள் தண்ணீரில் தத்தளிப்பதைக் கண்ட தென்மொழி, அவர்களைக் காப்பாற்றும் நோக்கில் உடனடியாக ஏரிக்குள் குதித்துள்ளார். ஆனால், ஏரியின் ஆழமான பகுதியில் சிக்கிய அவராலும் கரைக்குத் திரும்ப முடியவில்லை. இதனால், 4 மாணவிகளும் காப்பாளர் தென்மொழியும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

5 பேரின் உடல்களும் மீட்பு

தகவல் கிடைத்ததும் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ஏரியில் தீவிரமாகத் தேடி 5 பேரின் உடல்களையும் மீட்டனர். பின்னர் உடல்கள் உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

ஒரே நேரத்தில் 5 பேர் உயிரிழந்தது தொடர்பாக திருவண்ணாமலை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீபாவளி விடுமுறையில் மகிழ்ச்சியாகக் கழிக்கச் சென்றவர்களின் பயணம் இத்தகைய துயரத்தில் முடிந்தது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

இதையும் படிங்க: மக்களே..! உருவாகும் புதிய புயல் சின்னம்! தமிழகத்தில் இந்த 15 மாவட்டங்களில் கனமழை...!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#திருவண்ணாமலை ஏரி #மாணவிகள் உயிரிழப்பு #Samuthiram Lake #Water Drowning #தீயணைப்பு மீட்புப் படை
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story