உன்னோட ஆட்டம் யாருகிட்ட...அதிகாலையில் அத்துமீறி வீடு புகுந்த காமவெறியன்! 80 வயது பாட்டி கொடுத்த தர்மஅடி... இறுதியில் காத்திருந்த பயங்கர ட்விஸ்ட்!!!
திருவள்ளூரில் 80 வயது மூதாட்டி வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த வாலிபரை ஊன்றுகட்டையால் தாக்கி தப்பித்தார். பின்னர் போலீசார் குற்றவாளியை கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் நள்ளிரவில் தனியாக இருந்த 80 வயது மூதாட்டியிடம் அத்துமீறி நடக்க முயன்ற வாலிபரை, அவர் துணிச்சலுடன் எதிர்த்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பின்னர் உறவினர்கள் உதவியுடன் அந்த வாலிபர் பிடிபட்டு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
திருவள்ளூர் மாவட்டம் தாதுக்கான்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த பார்வதி (80), கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக தனியாக வசித்து வருகிறார். கணவர் மற்றும் பிள்ளைகள் இல்லாத நிலையில், அவரது அக்கா மற்றும் அண்ணன் பிள்ளைகள் அவ்வப்போது வந்து பார்த்துச் செல்வதாக கூறப்படுகிறது.
விடியற்காலையில் வீட்டிற்குள் அத்துமீறல்
இன்று அதிகாலை சுமார் 3 மணி அளவில் வீட்டின் வெளியே சத்தம் கேட்டதால் பார்வதி வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது, குடிபோதையில் இருந்த 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் வீட்டை நோக்கி வந்ததை கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.
இதையும் படிங்க: ஒரே ஒரு இரவில் மாறிய படுக்கை! பாய்ந்த 4 குண்டுகளால் மாமியாருக்குப் பதில் மருமகள் பலி.... கொழுந்தனின் காதல் திருமணத்தால் நடந்த கொடூரம்...!!!
இதையடுத்து உடனடியாக வீட்டுக்குள் சென்று கதவை மூட முயன்றபோதும், அந்த வாலிபர் அத்துமீறி உள்ளே நுழைந்து மூதாட்டியிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது.
ஊன்றுகட்டையால் தாக்குதல்
அந்த நேரத்திலும் மனம் தளராத பார்வதி, தன்னுடன் இருந்த ஊன்றுகட்டையை எடுத்து வாலிபரை சரமாரியாக தாக்கியுள்ளார். எதிர்பாராத தாக்குதலால் நிலைதடுமாறிய வாலிபர் அலறியபடி அங்கிருந்து ஓடிவிட்டார்.
அப்போது அவசரத்தில் அவரது செல்போன் கீழே விழுந்ததையும் கவனிக்காமல் தப்பிச் சென்றுள்ளார். உடனே பார்வதி தனது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார்.
செல்போன் எடுக்க வந்தபோது சிக்கிய வாலிபர்
விழுந்த செல்போனை எடுக்க அந்த வாலிபர் மீண்டும் வரக்கூடும் என சந்தேகித்த உறவினர்கள், வீட்டிற்குள் மறைந்து காத்திருந்தனர். சிறிது நேரத்தில் அங்கு வந்த வாலிபரை மடக்கிப் பிடித்து தாக்கிய பின்னர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின்படி, திருவள்ளூர் டவுன் காவல் ஆய்வாளர் தாமோதரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இதில், சேலை கிராமத்தைச் சேர்ந்த குமரேசன் (35) என்பதும், பெயிண்டராக வேலை செய்து வரும் அவர் கடும் போதையில் இந்த செயலுக்கு முயன்றதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் குமரேசனை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனியாக இருந்த நிலையில் கூட தன்னைக் காப்பாற்றிக் கொண்ட மூதாட்டியின் துணிச்சல் அப்பகுதியில் பேசுபொருளாகியுள்ளது.
இதையும் படிங்க: நள்ளிரவில் வீடு புகுந்து 10 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த தவெக நிர்வாகி! அதிரடியாக கைது செய்த போலீஸ்..!!!