×
 
☰
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தந்தை மறைவால் தவித்த மாணவி! அப்பா இல்லாம என்னால இருக்க முடியல... தந்தை இறந்த அதே இடத்தில் மகளும் உயிரிழப்பு! நெஞ்சை கலங்க வைக்கும் பின்னணி..!!!

திருப்பூரில் தந்தையை ரயில் விபத்தில் இழந்த 16 வயது மாணவி, அதே இடத்தின் அருகே ரயில் முன் பாய்ந்து உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

திருப்பூர் செம்மாண்டம்பாளையம் பகுதியில் தந்தையை ரயில் விபத்தில் இழந்த 16 வயது மாணவி, அதே இடத்தின் அருகே ரயில் முன் பாய்ந்து உயிரிழந்தார். தந்தையின் மறைவால் மனமுடைந்து இருந்த மாணவி உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து திருப்பூர் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தந்தையை இழந்ததால் மனவேதனையில் மாணவி

செம்மாண்டம்பாளையத்தைச் சேர்ந்த கார்த்திக் (39), எந்திர பிட்டராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி ஜானகி (37), அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர்களது மகள் சாதனா (16), தாயின் பள்ளியிலேயே பிளஸ் 2 படித்து வந்தார். வீட்டிலிருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் பள்ளி இருந்ததால், தினமும் தண்டவாளத்தைக் கடந்து சென்று வந்தார்.

இதையும் படிங்க: போடு வெடிய! பொங்கல் பரிசுத்தொகை... ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.3,000 ரொக்கப் பணம்..? முதல்வர் விஜய் போடும் அதிரடி ஆலோசனை திட்டம்..!!!

தந்தை மீது மிகுந்த பாசம் கொண்ட சாதனாவை, கார்த்திக் தினமும் தண்டவாளத்தைக் கடந்து பள்ளியில் விட்டுச் செல்வது வழக்கம். கடந்த ஜூன் 17-ஆம் தேதி மகளைப் பள்ளியில் விட்டுவிட்டு திரும்பியபோது, தண்டவாளத்தைக் கடக்க முயன்ற கார்த்திக் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார்.

தந்தையின் மறைவால் தவித்த மாணவி

தந்தையின் உயிரிழப்புக்குப் பிறகு சாதனா மிகவும் மனவேதனையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. 'எனது அப்பா இல்லாமல் என்னால் இருக்க முடியவில்லை' என்று சக மாணவிகளிடம் அடிக்கடி கூறி வந்துள்ளார். இதையடுத்து, அவருக்கு ஆறுதல் கூறி மனதைத் தேற்ற ஆசிரியர்களும் மாணவிகளும் முயன்று வந்தனர்.

தந்தை உயிரிழந்த இடத்தின் அருகே மாணவி உயிரிழப்பு

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த சாதனா, தண்டவாளம் அருகே சென்றபோது புதுடெல்லியில் இருந்து திருவனந்தபுரம் நோக்கிச் சென்ற ரயில் முன் பாய்ந்து உயிரிழந்தார். தனது தந்தை உயிரிழந்த இடத்தின் அருகிலேயே மாணவி உயிரிழந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

தகவல் அறிந்த திருப்பூர் ரயில்வே போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. மாணவியின் உயிரிழப்பு குடும்பத்தினரையும் அப்பகுதி மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

இதையும் படிங்க: உச்சக்கட்ட கொடூரம்! ரயில் சீட்டுக்கு அடியில் அழுகி கிடந்த பெண்ணின் சடலம்! சிசிடிவி காட்சியில் சிக்கிய வாலிபர்..! விசாரணையில் வெளியான அதிர்ச்சி உண்மை..!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#திருப்பூர் மாணவி உயிரிழப்பு #Tiruppur Tragedy #ரயில் விபத்து #சாதனா #திருப்பூர் ரயில்வே போலீஸ்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story