×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

16 வயது சிறுமி மரணத்தில் மர்மம்.. விவசாய நிலத்தில் எரித்த பெற்றோர்.. காரணம் என்ன? திருப்பத்தூரில் ஷாக்.!

Tirupattur News: 16 வயது சிறுமி மர்ம மரணம் அடைந்தார்.

Advertisement

12ம் வகுப்பு சிறுமி மர்ம மரணம் அடைந்ததாக கூறப்படும் விவகாரத்தில் விசாரணை நடக்கிறது.

16 வயது சிறுமி: 

16-Year-Old Schoolgirl: திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி, தும்பேரி, ஏறிக்கொல்லை பகுதியில் வசித்து வருபவர் கோவிந்தசாமி. இவரின் மகள் மோவிதா (வயது 16). சிறுமி அங்குள்ள பள்ளியில் 12ம் வகுப்பு பயின்று வருகிறார்.

இதையும் படிங்க: 15 வயது சிறுவன் கழுத்தறுத்து கொலை.. கண்மாயில் கிடந்த சடலம்.. சிவகங்கையில் திடுக்.!

தற்கொலை?

இதனிடையே, நேற்று முன்தினம் பள்ளிக்குச் சென்ற மாணவி மோவிதா, மாலை நேரத்தில் வீட்டுக்கு வரவில்லை. இதனால் பெற்றோர் மகளை தேடிப்பார்த்தபோது, அவர் தூக்கில் சடலமாக தொங்கி இருக்கிறார். கொட்டகையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. 

நடந்தது என்ன?

பின் மகளின் சடலத்தை மீட்ட பெற்றோர், உறவினர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எந்த விதமான தகவலையும் சொல்லாமல் இரவோடு இரவாக மனைவியின் உடலை தங்களின் விவசாய நிலத்தில் எரியூட்டியுள்ளனர். தகவல் அறிந்த விஏஓ காசிநாதன் அம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

தகவலின் பேரில் நேரில் சென்ற காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவி எப்படி இறந்தார்? கொலை செய்யப்பட்டாரா? என்ன காரணம் என விசாரணை நடந்து வருகிறது. 

இதையும் படிங்க: பிஸ்கட் சாப்பிடுவதில் அக்கா-தம்பி சண்டை.. பரிதாபமாக பறிபோன உயிர்.. திண்டுக்கல்லில் சோகம்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Crime news #Tirupattur #16 Year Old Girl
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story