×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நெல்லை மாவட்ட திமுகவில் உள்கட்சி பூசல்.. சொந்த கட்சியினரே எதிர்க்கும் நிலையில், தொகுதி யாருக்கு?

தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுகவின் கோட்டையாக கருதப்படும் பாளையங்கோட்டை தொகுதி யாருக்கு என்பதில் திமுகவினரிடையே கடுமையான போட்டி நிலவிவருகிறது.

Advertisement

தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுகவின் கோட்டையாக கருதப்படும் பாளையங்கோட்டை தொகுதி யாருக்கு என்பதில் திமுகவினரிடையே கடுமையான போட்டி நிலவிவருகிறது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகம் முழுவதும் தற்போதில் இருந்தே தேர்தல் பணிகள் தீவிரமாக நடந்துவருகிறது. அனைத்து கட்சிகளும் கூட்டணி அமைப்பதிலும், தேர்தல் வியூகங்களை வகுப்பதிலும் தீவிரமாக செயலாற்றி வருகின்றன. குறிப்பாக இந்த தேர்தலில் நடிகர் விஜய்யின் தலைமையிலான தவெக கட்சியும் இணைந்திருப்பதால் வருகின்ற சட்டமன்ற தேர்தல் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ஆளுங்கட்சியான திமுக 200 தொகுதிகளை இலக்காக கொண்டு செயலாற்றிவருகிறது. அனைத்து தொகுதிகளுக்கும் போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணியும் தீவிரமடைந்துள்ளநிலையில் திமுகவின் கோட்டையாக கருதப்படும் பாளையங்கோட்டை தொகுதியில், தற்போது நிலவிவரும் திமுக உள்கட்சி பூசலால் அந்த தொகுதிக்கு யார் வேட்பாளர் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க: அதிர்ச்சியில் எடப்பாடி! அதிமுக முக்கிய நிர்வாகிகளை தட்டி தூக்கிய செந்தில் பாலாஜி! அதிரும் திமுக அரசின் திட்டவட்ட நகர்வு!

கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அப்துல் வஹாப் இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் நெல்லை மத்திய மாவட்ட செயலாளர் பொறுப்பிலும் இருந்து வருகிறார். இந்நிலையில் வரவிருக்கும் தேர்தலிலும் அப்துல் வஹாப் போட்டியிட விரும்பும் நிலையில், அவருக்கு போட்டியிட வாய்ப்பு கொடுத்தாலும் கட்சி நிர்வாகிகள் உள்ளடி வேலை பார்ப்பார்க்க வாய்ப்பு இருப்பதாக அப்பகுதி திமுக வட்டாரம் தெரிவித்து வருகிறது.

நெல்லை மாநாகராட்சி மேயராக இருந்த சரவணன் மாற்ற வைத்தது முதல் பல விவகாரங்களில் அப்துல் வகாப் பெயர் பெயர் அடிப்பட்டது. இதை அடுத்து, நெல்லை மத்திய மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து அப்துல் வகாப் நீக்கப்பட்டார். இதற்கு பதிலாக மைதின் கான் மாவட்ட செயலாளர் பொறுப்பில் நியமிக்கப்பட்டார். ஆனால், சில மாதங்களிலேயே அப்துல் வாகப்புக்கே நெல்லை மத்திய மாவட்ட செயலாளர் பதவி மீண்டும் கொடுக்கப்பட்டது.

மேலும் பாளையங்கோட்டை தொகுதியில் அடிப்படை வசதிகளான குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்திட தற்போது உள்ள எம்எல்ஏ வஹாப் எந்த வித முயற்சியும் எடுக்கவும் இல்லை, கண்டுகொள்ளவில்லையெனவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், இவர் மீது கட்சியின் தலைமைக்கு தொடர்ந்து புகார்கள் சென்ற வண்ணம் உள்ளதாக கூறப்படும் நிலையில், பாளையங்கோட்டை தொகுதிக்கு யார் வேட்பாளர் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் என கூறிவருகின்றனர் திமுக தொண்டர்கள்.

இதையும் படிங்க: அதிரடி அரசியல் காட்டும் தவெக! திமுக வின் முக்கிய நிர்வாகி தவெக வில் இணைவு! அதிர்ச்சியில் ஸ்டாலின்!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#TN Election 2026
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story