×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கள்ளகாதலியுடன் சேர்ந்து வாழ சாவு நாடகம்.. அடேங்கப்பா திட்டம் 5 மாதத்தில் மண்ணைக்கவ்விய சோகம்.!

கள்ளகாதலியுடன் சேர்ந்து வாழ சாவு நாடகம்.. அடேங்கப்பா திட்டம் 5 மாதத்தில் மண்ணைக்கவ்விய சோகம்.!

Advertisement

தனது கள்ளகாதலியுடன் உல்லாசமாக வாழ சாவு நாடகம் நடத்திய இளைஞர், 5 மாதங்கள் கழித்து கள்ளகாதலியுடன் சுற்றித்திரிந்தபோது கைதாகியுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள உவரி, வள்ளன்விளை பகுதியை சேர்ந்தவர் தில்லைபாண்டி. இவரின் மகன் பவித்ரன் (வயது 25). இவர் எலக்ட்ரீஷியனாக பணியாற்றி வருகிறார். கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி மீன்பிடிக்க செல்வதாக கடலுக்கு சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள், கடற்கரைக்கு சென்று பார்த்துள்ளனர். 

அப்போது, அவரின் இருசக்கர வாகனம் மற்றும் செருப்பு இருந்த நிலையில், அவரின் செல்போனும் வீட்டிலேயே இருந்துள்ளது. இதனால் மீன்பிடிக்க சென்ற பவித்ரனை கடலலை இழுத்து சென்று இருக்கலாம் என நினைத்துள்ளனர். காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக தில்லை பாண்டியனின் கார் திருட்டுப்போன நிலையில், அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். விசாரணையில், பவித்ரனுக்கு, அப்பகுதியை சேர்ந்த திருமணமான பெண்ணுடன் தொடர்பு இருப்பது உறுதியானது. அவரும் கணவர் மற்றும் குழந்தைகளை பிரிந்து பிப்ரவரி முதல் மாயமாகி இருக்கிறார். 

இதனால் இருவரையும் அதிகாரிகள் தேடிய நிலையில், கள்ளக்காதல் ஜோடி உளுந்தூர்பேட்டையில் வசித்து வருவது அம்பலமானது. பவித்ரன் தனது தந்தையின் காரையும் திருடி சென்று கள்ளகாதலியுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இருவரையும் கைது செய்த காவல் துறையினர், உவரி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tirunelveli #Affair #couple #police #tamilnadu
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story