×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பிஞ்சிலேயே பழுத்த 3 சிறார்கள்.. 14 வயது மாணவிக்கு.,  தமிழகத்தில் இப்படியா? திடுக்கிடவைக்கும் சம்பவம்..!

Krishnagiri News Today: மாணவிக்கு இளைஞர்கள் செய்த கொடுமை கிருஷ்ணகிரியில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

மாணவியின் அந்தரங்க வீடியோவை காண்பித்து ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டிய சம்பவம் நடந்துள்ளது.

பக்கத்து வீடு:

Blackmailing 14-Year-Old Girl With Morphed Videos: கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை பகுதியில் செயல்படும் தனியார் பள்ளியில், மாணவர் ஒருவர் ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் பெற்றோருடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். கடந்த 6 மாதங்களுக்கு முன்னதாக மாணவர் திடீரென பள்ளிக்குச் செல்லாமல் நின்றுள்ளார். மாணவரின் வீட்டுக்கு மேல் மாடியில், இதே பள்ளியில் பயின்று வரும் 9ம் வகுப்பு மாணவி குடும்பத்துடன் தங்கி இருந்துள்ளார். 

இதையும் படிங்க: நல்லவன் போல பேசி கொடுமை.. பள்ளி மாணவிக்கு வீடுபுகுந்து தொல்லை.. திடுக்கிடவைக்கும் பயங்கரம்.!

நண்பர்களிடம் சொன்னார்:

பள்ளிக்குச் செல்லாமல் இருந்த மாணவரை காண, அவருடன் பயின்று வந்த 2 மாணவர்கள் அவ்வப்போது வந்து சென்றபடி இருந்துள்ளனர். இதனிடையே, இவ்வாறு வந்துசெல்லும்போது, பள்ளியில் வேறொரு வகுப்பில் பயின்று வரும் 9ம் வகுப்பு மாணவியை கண்டுள்ளனர். வீட்டில் இருக்கும் மாணவரும் மாணவியின் இன்ஸ்டாகிராம், செல்போன் நம்பர் ஆகியவை தனக்கு தெரியும் என நண்பர்களிடம் கூறி இருக்கிறார்.

வில்லங்க வேலை:

இதனைக்கேட்ட இருவரும் என மூவராக சேர்ந்து மாணவியின் இன்ஸ்டாகிராம் ஐடியை தேடி பார்த்து இருக்கின்றனர். அதில் இருந்த போட்டோக்களை பதிவிறக்கம் செய்து, புதிய ஐடி ஒன்றை உருவாக்கி மாணவிக்கு நட்பு அழைப்பு விடுத்துள்ளனர். இன்ஸ்டாகிராமில் மெசேஜ் செய்து மாணவர்கள் பேசி வந்த நிலையில், ஒருகட்டத்தில் தங்களின் கொடூரத்தனத்தை வெளிப்படுத்த தொடங்கி இருக்கின்றனர். மேலும், நீ பள்ளியில் யாருடன் பேசுகிறாய்? யாரை காதலித்து வருகிறாய்? உனது அக்கா யாருடன் பேசுகிறார்? அனைத்தும் எங்களிடம் வீடியோவாக உள்ளது என கூறி மிரட்டி இருக்கின்றனர்.

பயத்தில் நடந்த கொடுமை:

இதனால் பதறிப்போன மாணவி தங்களை ஏதும் செய்துவிடாதீர்த்தல் என கெஞ்சி இருக்கிறார். மாணவியின் புகைப்படங்களை ஏற்கனவே பதிவிறக்கம் செய்து வைத்திருந்த 3 கொடூரர்கள், அதனை மாபிங் செய்து அனுப்பி மிரட்டி இருக்கின்றனர். இதனால் நடப்பது என்ன என்பது தெரியாமல் மாணவி விழிபிதுங்கி இருக்கிறார். மேலும், இதேபோல உனது அக்காவின் புகைப்படத்தையும் சமூக வலைத்தளத்தில் பரப்புவதாக மிரட்டி இருக்கிறார்கள்.

வீடியோ கேட்டு மிரட்டல்:

இவ்வாறு செய்யாமல் இருக்க நீ ஆடையில்லாமல் வீடியோ, போட்டோ எடுத்து அனுப்ப வேண்டும் என கட்டாயப்படுத்தி இருக்கின்றனர். மாணவியும் பயத்தில் மாணவர்களின் ஐடிக்கு அனுப்பி வைத்துள்ளார். சிறார்கள் மூவரும் இதனை பதிவிறக்கம் செய்து மாணவியின் தந்தையுடைய வாட்சப் நம்பருக்கு அனுப்பி ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டி இருக்கின்றனர். மேலும், இதனை சமூக வலைத்தளத்தில் பரப்பினால் மானம் கப்பலேறி, நீங்கள் குடும்பத்தோடு தற்கொலை செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

அதிரடி காட்டிய அதிகாரிகள்:

இதனையடுத்து, மாணவியின் தந்தை கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல்துறையினர் 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

இதையும் படிங்க: வேலைக்கு வந்த இடத்தில்.. 16 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. சென்னையில் திடுக் சம்பவம்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Crime news #sexual abuse #Krishnagiri #14 வயது மாணவி #ராயக்கோட்டை #நிர்வாண வீடியோ
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story