×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கல்லூரி மாணவிகள் முன்பு கெத்து காட்ட நினைத்து, டியூ வண்டியை ஸ்டேஷனில் விட்டுச்சென்ற ரோட் சைட் ரோமியோஸ்.. ஐயோ., அம்மா கதறல்..!

கல்லூரி மாணவிகள் முன்பு கெத்து காட்ட நினைத்து, டியூ வண்டியை ஸ்டேஷனில் விட்டுச்சென்ற ரோட் சைட் ரோமியோஸ்.. ஐயோ., அம்மா கதறல்..!

Advertisement

 

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளத்தில் அரசு மகளிர் கலை & அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரிகளுக்கு வந்து செல்லும் மாணவிகள், தனியார் வேன் உதவியோடு தங்களின் ஊர்களுக்கு செல்வது வழக்கம். 

இந்த நிலையில், மாணவிகளின் வாகனத்தை பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வரும் 2 புள்ளிங்கோஸ், கல்லூரி மாணவிகள் பயணிக்கும் வாகனத்தை குறுக்கே நிறுத்துவது, முந்தி செல்வது, மாணவிகள் முன்பு ஸீன் காட்டுவதற்காக கைகளை விட்டு வாகனத்தை இயக்குவது, அதிக சப்தத்தை எழுப்பியவாறு பயணிப்பது என இருந்து வந்துள்ளனர்.

இதனால் கடுமையான அளவு பாதிக்கப்பட்ட மாணவிகளில் ஒருவர், தனது செல்போனில் இவர்களின் சேட்டையை படம்பிடித்து வீடியோ ஆதாரத்துடன் தட்டார்மடம் காவல் துறையினருக்கு அனுப்பி வைத்துள்ளார். இதனையடுத்து, வாகனத்தின் பதிவெண் கொண்டு விசாரணை நடத்திய அதிகாரிகள், 2 இளைஞர்களையும் கண்டறிந்தனர். 

அன்பின் நகரம் பகுதியை சேர்ந்த 2 இளைஞர்களை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்கையில், ஏழ்மையான குடும்ப பின்னணியை கொண்ட இரண்டு இளைஞர்களும், அங்குள்ள துடைப்பம் தயார் செய்யும் நிறுவனத்தில் தினக்கூலியாக பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் பள்ளிப்படிப்பையும் இடை நிறுத்தியுள்ளார்கள். 

வேலை பார்த்து வரும் வருமானத்தை வீட்டில் கொடுக்காமல், உள்ளூரில் செயல்படும் வாகன விற்பனை நிறுவனத்தில் மாத தவணை முறையில் இருசக்கர வாகனம் வாங்கி மாணவிகள் முன்பு கெத்து காண்பிக்க நினைத்து செயல்பட்டதும் உறுதியானது. இறுதியில் 2 இளைஞர்களையும் எச்சரித்த காவல் துறையினர், இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து அவர்களை அனுப்பி வைத்தனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Thoothukudi #Sathakulam #tamilnadu #Pullingows
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story