தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தெரு இளைஞர்களுடன் கூடா சாவகாசம்.. கண்டித்த தாய் கழுத்தறுத்து கொலை.. 17 வயது சிறுமி வெறிச்செயல்.! பேரதிர்ச்சியில் தமிழகம்.!

தெரு இளைஞர்களுடன் கூடா சாவகாசம்.. கண்டித்த தாய் கழுத்தறுத்து கொலை.. 17 வயது சிறுமி வெறிச்செயல்.! பேரதிர்ச்சியில் தமிழகம்.!

Thoothukudi 17 Aged Minor Girl Killed Mother She Condemn Friendship with Youngsters Advertisement

வேலை-வெட்டி இல்லாமல் தெருவை சுற்றிவரும் இளைஞர்களுடன் மகள் நட்பு கொண்ட நிலையில், அதனை கண்டித்த தாய் மகளால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட பயங்கரம் தூத்துக்குடியை அதிரவைத்துள்ளது.

தூத்துக்குடி மாநகரில் உள்ள வண்ணார் தெருவில் வசித்து வருபவர் முனியலட்சுமி. இவர் கணவரை பிரிந்து, கடந்த ஒரு வருடமாக தனது 3 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். முனியலட்சுமியின் 17 வயது மகள், அதே பகுதியில் வசித்து வந்த இளைஞருடன் பேசி வந்ததாக தெரியவருகிறது. மேலும், ஒரு வாலிபரை காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. 

தெருவில் வெட்டியாய் சுற்றித்திரியும் இளைஞர்களுடன் மகள் நட்பு வைத்திருந்ததால், அதனை தாய் கண்டித்து இருக்கிறார். இந்த நிலையில், தனது தாயை மர்ம நபர்கள் கொலை செய்துவிட்டதாக சிறுமி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். 

Thoothukudi

சம்பவ இடத்திற்கு விரைந்த தென்பாகம் காவல் துறையினர், முனியலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணையில், 17 வயது சிறுமியின் மீது சந்தேகம் திரும்ப, அவர் தான் கொலையை செய்ய மூலகாரணமாக இருந்துள்ளார் என்ற பகீர் தகவலும் அம்பலமானது. 

காலையில் முனியலட்சுமி உறங்கிக்கொண்டு இருந்த சமயத்தில், 17 வயது சிறுமி தனது 2 ஆண் நண்பருடன் சேர்ந்து தாயை கழுத்தறுத்து கொலை செய்துள்ளார். பின்னர், அவரின் மீது சந்தேகம் ஏற்படாமல் இருக்க காவல் துறையினரை தொடர்பு கொண்டதும் அம்பலமானது. சிறுமியை கைது செய்த காவல் துறையினர், 2 வாலிபர்களை தேடி வருகின்றனர். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Thoothukudi #tamilnadu #Minor Girl #mother #friendship #Murder #police
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story