எவ்வளவு ஒரு வேதனை.... 10 ஆம் வகுப்பு ரிசல்ட்டில் 500-க்கு 495 மதிப்பெண்கள் எடுத்தும்.... அந்த மகிழ்ச்சியை கொண்டாட மகன் இல்லை! கதறி துடிக்கும் பெற்றோர்...!!!
திருவள்ளூரில் ஏரியில் மூழ்கி உயிரிழந்த 10ஆம் வகுப்பு மாணவர் அபிஷேக், பொதுத்தேர்வில் 500க்கு 495 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டையில் ஏரியில் மூழ்கி உயிரிழந்த 10ஆம் வகுப்பு மாணவர், பொதுத்தேர்வில் 500க்கு 495 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்திருப்பது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், மாணவரின் குடும்பத்தினர் கண்கலங்கியுள்ளனர்.
தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. மாநிலம் முழுவதும் 9 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் தேர்வு எழுதியிருந்த நிலையில், மொத்த தேர்ச்சி விகிதம் 94.31 சதவீதமாக அறிவிக்கப்பட்டது. பல பள்ளிகளில் மாணவர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட சூழலில், கவரப்பேட்டையில் மட்டும் ஒரு குடும்பம் சோகத்தில் மூழ்கியுள்ளது.
இதையும் படிங்க: 10-ம் வகுப்பு தேர்வு முடிவில் கணித பாடத்தில் தோல்வி! புதுக்குளத்தை சேர்ந்த மாணவி தற்கொலை.! கதறி துடிக்கும் பெற்றோர்...!!!
ஒரு மாதத்திற்கு முன் நடந்த சோகம்
கவரப்பேட்டை பகுதியை சேர்ந்த அபிஷேக் என்ற மாணவர், கடந்த மாதம் நண்பர்களுடன் ஏரியில் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்தார். 10ஆம் வகுப்பு தேர்வு எழுதி முடித்திருந்த நிலையில் நடந்த இந்த சம்பவம் அப்போது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து, நேற்று வெளியான 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை அவரது உறவினர்கள் பார்த்தபோது மேலும் உருக்கமான நிலை ஏற்பட்டது. ஏற்கனவே இழப்பால் துவண்டிருந்த குடும்பத்தினருக்கு, இந்த மதிப்பெண் தகவல் கண்கலங்க வைத்துள்ளது.
500க்கு 495 மதிப்பெண்
அபிஷேக் தமிழில் 99, ஆங்கிலத்தில் 99, கணிதத்தில் 99, அறிவியலில் 100 மற்றும் சமூக அறிவியலில் 98 மதிப்பெண்கள் பெற்று மொத்தம் 500க்கு 495 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். இதன் மூலம் அவர் தனது பள்ளியிலும் முதலிடம் பிடித்துள்ளார்.
படிப்பில் தொடர்ந்து சிறந்து விளங்கியதாக கூறப்படும் அபிஷேக், எதிர்காலத்தில் பெரிய சாதனை படைப்பார் என ஆசிரியர்களும் அப்பகுதி மக்களும் நம்பிக்கை வைத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் தேர்வு முடிவுகள் வெளியாகும் முன்பே அவர் உயிரிழந்தது, அந்த பகுதி மக்களிடையே ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மகனின் 10 ஆம் வகுப்பு மதிப்பெண்ணை சொன்ன அறந்தாங்கி நிஷா! இவ்வளவு தானா? ஆனால் அவர் சொன்ன இன்னொரு விஷயம் தான் ஹைலைட்....வைரலாகும் வீடியோ...!!!