×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கரப்பான், பூரானுடன் சமைக்கப்பட்ட இட்லி; திருவள்ளூர் ஸ்ரீ பாலவிக்னேஷ் உணவகத்தில் பகீர்.! கொள்ளை இலாபம் வேண்டுமாம், தரம் இருக்காதாம்.! 

கரப்பான், பூரானுடன் சமைக்கப்பட்ட இட்லி; திருவள்ளூர் ஸ்ரீ பாலவிக்னேஷ் உணவகத்தில் பகீர்.! கொள்ளை இலாபம் வேண்டுமாம், தரம் இருக்காதாம்.! 

Advertisement

 

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ பாலவிக்னேஷ் பவன் சைவ உணவகத்தில் நேற்று இளைஞர் ஒருவர் தனது அக்கா குழந்தைகளுக்கு இட்லி வாங்கி சென்றுள்ளார். 

இட்லியை வீட்டில் சாப்பிட பிரித்து பார்த்தபோது அதில் கரப்பான், பூரான் போன்ற பூச்சி இட்லியுடன் வெந்து வந்தது உறுதியானது. 

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த இளைஞர் உணவகத்திற்கு தொடர்பு கொண்டபோது பதில் அளிக்கவில்லை. இதனால் உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்க முற்பட்டபோதும் பலனில்லை. 

இந்த விஷயம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இளைஞர் கோரிக்கை வைத்துள்ளார். இட்லி ரூ.20 க்கு விற்பனை செய்த பெரிய உணவகத்தில் இவ்வாறான சம்பவம் நடந்துள்ளது உள்ளூர் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#thiruvallur #Sri Bala Vignesh #tamilnadu
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story