ஃபுல் போதையில் இளைஞர்களுடன் சாலையில் கிடந்த இளம்பெண்..! போலீஸ்ஸை கண்டதும் தப்பி ஓடிய வாலிபர்.. குமரியில் பரபரப்பு சம்பவம்.!!!
கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பில் மது அருந்திய நிலையில் மயங்கிக் கிடந்த இளம்பெண் மற்றும் இளைஞர்களை பெண் காவலர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு பகுதியில் சுற்றுலா வந்த இளம்பெண் மற்றும் மூன்று இளைஞர்கள் மது போதையில் சாலையோரத்தில் மயங்கிக் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்களை முதலில் கவனித்த பெண் காவலரின் உடனடி நடவடிக்கையால் மூவரும் மீட்கப்பட்ட நிலையில், சம்பவத்தின் பின்னணி குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சாலையோரத்தில் மயங்கிக் கிடந்த சுற்றுலா பயணிகள்
தகவலின்படி, சென்னை தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் இளம்பெண் மற்றும் மூன்று இளைஞர்கள் விடுமுறைக்காக திற்பரப்பு வந்திருந்தனர். அவர்கள் அருமனை–களியல் சாலையில் மது போதையில் மயங்கிக் கிடந்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த வழியாக பணிக்குச் சென்ற பெண் காவலர் பிரேமலதா அவர்களை கவனித்து உடனடியாக உதவ முனைந்தார்.
இதையும் படிங்க: நள்ளிரவில் 6 இளைஞர்களைப் அறிவாளால் தாக்கிய மர்ம கும்பல்! தென்காசியில் நடந்த பயங்கரம்...!!!
காவலரைப் பார்த்ததும் தப்பியோடிய இளைஞர்
அவர்களில் இருவருக்கு உடலில் காயங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில், காவலரை பார்த்ததும் ஒருவரோ அங்கிருந்து தப்பிச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மீதமிருந்த இரு இளைஞர்கள் மருத்துவமனைக்கு செல்ல மறுத்த நிலையில், பொதுமக்களின் உதவியுடன் அருமனை காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
காயங்களுக்கு காரணம் என்ன?
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், புதுக்கோட்டையைச் சேர்ந்த இளம்பெண் மற்றும் தென்காசி, அருமனையைச் சேர்ந்த இரு இளைஞர்களை மீட்டு அரசு மருத்துவமனைகளில் அனுமதித்தனர். விடுமுறைக்காக திற்பரப்பு பகுதியில் தங்கியிருந்த இவர்களுக்கு சாலை விபத்தில் காயம் ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் மோதல் நடந்ததா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: மன்னார்குடி அருகே பள்ளி முடிந்து வீடு திரும்பிய 4 மாணவர்கள் மீது கார் மோதி உயிரிழப்பு! கதறிதுடிக்கும் பெற்றோர்கள்...!!!!